‘முதல்ல எமோஜி அப்டேட்.. இப்போ இதுவா..’ அடுத்தடுத்து பயனர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் WhatsApp..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வாட்ஸ் அப் செயலியின் ஸ்டேட்டஸ் வசதியில் புது அப்டேட் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘முதல்ல எமோஜி அப்டேட்.. இப்போ இதுவா..’ அடுத்தடுத்து பயனர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் WhatsApp..!

வாடிக்கையாளர்களுக்கு கவரும் வகையில் வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட்டுகளை அறிவித்து வருகிறது. ஒவ்வொரு அப்டேட்டும் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு பின்னர் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் புது அப்டேட் விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் செய்தி அல்லது வீடியோ லிங்கை பதிவிடுவது வழக்கம். ஆனால் அது ஒரு லிங்காகவே இருக்கும், அதனை மற்றவர்கள் க்ளிக் செய்த பின் தான், அந்த லிங்க் தொடர்பான வெப் பேஜ் ஓபன் ஆகும். இந்த முறையில் தற்போது வாட்ஸ் அப் அப்டேட் கொண்டுவரவுள்ளது.

WhatsApp planning to add preview feature for links in status

அதாவது ஸ்டேட்டஸாக வைக்கப்படும் லிங்குக்கு இனி ப்ரிவியூ காட்ட வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. அதாவது அந்த லிங்க் என்ன என்பதை அங்கேயே சிறு விளக்கமாக காட்டப்படும். அதைப் பார்த்து ஆர்வம் இருந்தால் மேற்கொண்டு க்ளிக் செய்து முழு செய்தியையோ அல்லது வீடியோவையோ பார்க்கலாம். இது விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

முன்னதாக வாட்ஸ் அப்பில் எமோஜி அப்டேட் அறிமுகமானது. பேஸ்புக்கில் முதலில் லைக் மட்டுமே செய்யும் வசதி இருந்தது. பின்னர் அது எமோஜி ரியாக்‌ஷன்களாக அப்டேட் செய்யப்பட்டது. லைக், சோகம், சிரிப்பு உள்ளிட்ட ரியாக்‌ஷன்கள் கொடுக்கப்பட்டன. அதேபோல் இப்போது வாட்ஸ் அப்பிலும் எமோஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்