Veetla Vishesham Mob Others Page USA

அடுத்தடுத்து வாட்சாப் நிறுவனம் வெளியிட்ட அப்டேட்...நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறியதால் உற்சாகத்தில் பயனர்கள்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பிரபல சமூக வலை தளமான வாட்சப் பல அப்டேட்களை வெளியிட்டு தனது பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்தடுத்து வாட்சாப் நிறுவனம் வெளியிட்ட அப்டேட்...நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறியதால் உற்சாகத்தில் பயனர்கள்..!

Also Read | உங்க நேர்மை பிடிச்சிருக்கு.. "இப்படி ஒரு லீவ் லெட்டரை நான் பார்த்ததே இல்லை".. மேனேஜர் பகிர்ந்த புகைப்படம்.. யாரு சாமி நீ?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்சப் செயலியை உபயோகித்து வருகின்றனர். மக்களின் தனியுரிமை பாதுகாப்பு குறித்த அமைப்புகளை மேம்படுத்த தொடர்ந்து அப்டேட்களை அந்நிறுவனம் அறிவித்து வந்தது. அந்த வகையில் தற்போது ஸ்டேட்டஸ்-ஐ குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும்படி வைப்பதுபோலவே, ப்ரொபைல் புகைப்படத்தையும் வைக்கும் வசதியை அளிக்க புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது வாட்சப் நிறுவனம். அதேபோல, புதிய வாட்சப் குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றுக்கு ப்ரைவசி கட்டுப்பாட்டை பயனர்களுக்கு கொடுத்திருக்கிறது வாட்சப். முன்னதாக வாட்சப் ப்ரைவசியில் last seen, status, about ஆகியவற்றை மட்டுமே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வாட்ஸ் அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸை நமக்கு தேவைப்படும் நபர்களுக்கு மட்டும்  தெரியும்படி வைக்கிறோமோ profile picture-ஐயும் Everyone, My Contact & My Contact Except என்ற ஆப்ஷனை பயன்படுத்தி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதேபோல, புதியவர்கள் தம்மை வாட்சப் குழுக்களில் சேர்ப்பதை தவிர்க்கவும் இதே போன்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Whatsapp new Update about status and chat Transfer

சாட் ஹிஸ்டரி

இந்நிலையில், ஆண்ட்ராய்ட்-ல் இருந்து iOSக்கு மாறிய நபர்களுக்கு முக்கிய அப்டேட்டை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் மெட்டாவெர்ஸின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்.. இதுகுறித்து அவர் கடந்த ஜூன் 14ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மார்க் ஸக்கர்பெர்க். அதில், “கடந்த ஆண்டு iOSல் இருந்து ஆண்ட்ராய்டுக்கு சாட் ஹிஸ்டரிஸ் மாற்றப்பட்டது போன்று ஆண்ட்ராய்டில் இருந்து iOSக்கு வாட்ஸ் அப்பின் சாட் ஹிஸ்டரியை மாற்றுவதற்கான அம்சத்தை கொண்டு வரப்போகிறோம். அதில் end to end encryption திறனும் பராமரிக்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி அடுத்தடுத்த அப்டேட் குறித்த தகவல்களை வெளியிட்டு தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது வாட்சப் நிறுவனம்.

Also Read | Breaking: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைப்பு.. தமிழகத்தில் முதன்முறையாக செய்யப்பட்ட புது மாற்றம்..!

WHATSAPP UPDATES, WHATSAPP NEW UPDATE, CHAT TRANSFER

மற்ற செய்திகள்