'பார்த்த உடன் மாயமாகும் மெசேஜ்கள்'!.. 'வாட்ஸ் அப்'பின் அசர வைக்கும் புதிய அப்டேட்ஸ்!.. முழு விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

உலகளவில் தகவல்களை பரிமாற்றிக் கொள்ள உலக மக்களிடையே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் அப் (WhatsApp) செயலி தான்.

'பார்த்த உடன் மாயமாகும் மெசேஜ்கள்'!.. 'வாட்ஸ் அப்'பின் அசர வைக்கும் புதிய அப்டேட்ஸ்!.. முழு விவரம் உள்ளே!

வீடியோ, வாய்ஸ், text chat-களுக்கு வாட்ஸ் அப் செயலி பெருமளவில் உதவுகிறது. தனி நபருக்குள்ளும், குழுவிலும் இதில் தகவல்களை பரிமாற்றிக் கொள்ளலாம். இந்நிலையில், வரும் நாட்களில் வாட்ஸ் அப்பில் புதிதாக சில அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அதிகபட்சம் ஒரு வாட்ஸ் அப் கணக்கை நான்கு சாதனங்களில் (Device) பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நாம் அடுத்தவர்களுக்கு அனுப்பும் செய்திகளை அவர்கள் ஒரு முறை பார்த்ததும் தானாகவே மறைந்து போகும் வகையில் View Once என்ற அம்சம் இடம்பெற உள்ளது.

அதே போல Disappearing Mode என்ற வசதியும் விரைவில் வர உள்ளது. அதன் மூலம் chat thread-களில் உள்ள மெசேஜ்களை தானாகவே அழிக்கவும் முடியும் எனத் தெரிகிறது. இதை வாட்ஸ் அப் சர்வதேச தலைவர் Will Cathcart தெரிவித்துள்ளதார். வாட்ஸ் அப்பின் உரிமையாளரான Mark Zuckerberg இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

 

மற்ற செய்திகள்