IKK Others
MKS Others

இந்த 'எட்டுக்குள்ள' ஒன்று இருந்தாலும்.. உங்க வாட்ஸ் அப் காலி.. நீங்களே பாருங்க

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கடந்த அக்டோபர் 2021 முதல் சுமார் 20 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறித்துள்ளது. எதனால் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படுகின்றன என உங்களுக்குத் தெரியுமா? கீழ்வரும் 8 காரணங்களுக்காக உங்களது வாட்ஸ்அப் கணக்கும் முடங்கும் அபாயம் இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனமே தெரிவித்துள்ளது.

இந்த 'எட்டுக்குள்ள' ஒன்று இருந்தாலும்.. உங்க வாட்ஸ் அப் காலி.. நீங்களே பாருங்க

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட வாட்ஸ்அப் செயலி 30.27 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது. வாட்ஸ்அப்-ன் மெட்டா நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதாக முடக்கப்பட்ட கணக்குகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்திய தொழில்நுட்பத் துறை வழங்கும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் விதிகள், 2021 அடிப்படையில் வாட்ஸ்அப் செயலி மாதந்தோறும் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிடும்.

WhatsApp may ban your account for all these resons

வாட்ஸ்அப் செயலியை ‘மெட்டா’ என்னும் நிறுவனத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் என்ற நிறுவனத்தின் பெயர் தான் சமீபத்தில் ‘மெட்டா’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்த நிறுவனத்தின் கீழ் தான் தறோது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் இயங்கி வருகின்றன.

எஸ்.எம்.எஸ் முறையை விட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் சேவையாக வாட்ஸ்அப் உள்ளது. இதனால் இந்தியாவிலேயே அதிகப்படியான போலி செய்திகளை பரப்பி இந்திய சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குழைக்கும் வகையிலான செயல்களும் நடக்கும் தளமாகவும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது.

WhatsApp may ban your account for all these resons

இதன் காரணமாக பல இந்திய கணக்குகள் புகார்களுக்கு உள்ளாகின்றன. போலி செய்திகளை பரப்புவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் காரணமாக பல இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் நேரடியாக நிறுவனத்தாலேயே முடக்கப்படுகின்றன. வாட்ஸ்அப் செயலி தன்னுடைய ‘நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்’ விதிகளை மீறினால் கணக்கு முடக்கப்படும் என தனது செயலியிலேயே குறிப்பிட்டுள்ளது.

WhatsApp may ban your account for all these resons

கீழ்வரும் 8 காரணங்களுக்காக உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும்:

1. வேறு ஒருவரை அடையாளப்படுத்துவது போல் வாட்ஸ்அப் கணக்கு தொடங்கினால் உங்கள் கணக்கு முடக்கப்படும்.

2. உங்களது ‘contact list’-ல் ஒருவரது எண் இல்லாத போது அவருக்கு நீங்கள் தொடர்ந்து மெசேஞ்களை அனுப்பி வந்தால் உங்கள் கணக்கு முடங்கும்.

3. WhatsApp Delta, GBWhatsApp, WhatsApp Plus ஆகிய 3-ம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்தினால் உங்கள் கணக்கு முடங்கும்.

4. பல பயனாளர்கள் உங்கள் கணக்கை முடக்கினால் உங்கள் கணக்கு முடக்கப்படும்.

5. பலர் தங்களது வாட்ஸ்அப் கணக்கில் இருந்து உங்கள் கணக்கின் மீது புகார் தெரிவித்தால் உங்கள் கணக்கு முடக்கப்படும்.

6. மால்வேர் லிங்க்-களை ஷேர் செய்தால் உங்கள் கணக்கை வாட்ஸ்அப் செயலி முடக்கும்.

7. ஆபாச வீடியோக்கள், மிரட்டல்கள் அல்லது மானநஷ்ட மெசேஞ்கள் அனுப்பினால் உங்கள் கணக்கு முடங்கும்.

8. போலி செய்திகள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்தால் உங்கள் கணக்கு முடங்கும்.

WHATSAPP, WHATSAPP BAN, WHATSAPP UDPATE, வாட்ஸ்அப்

மற்ற செய்திகள்