'இனிமேல் தப்பா அனுப்பிட்டோமோன்னு பயம் வேண்டாம்'... 'வாட்ஸ்ஆப் வியூ ஒன்ஸ்'... அசத்தலாக வெளியான அப்டேட்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஐபோன் பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கும் நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

'இனிமேல் தப்பா அனுப்பிட்டோமோன்னு பயம் வேண்டாம்'... 'வாட்ஸ்ஆப் வியூ ஒன்ஸ்'... அசத்தலாக வெளியான அப்டேட்!

வாட்ஸ்ஆப் நிறுவனம் 'வியூ ஒன்ஸ்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்குப் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒருமுறை பார்க்கப்பட்ட பின்னர் சாட்டிலிருந்து மறைந்துவிடும். மேலும் பெறுபவரின் கேலரியில் புகைப்படமோ, வீடியோவோ சேமிக்க முடியாது.

வாட்ஸ்ஆப்பின் வழியாக மற்றொருவருக்கும் அவற்றை அனுப்ப முடியாது. புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்புவதற்கு முன்னதாக, கேப்ஷன் பார் அருகில் தோன்றும் ஒன்று என்ற ஐகானைப் பயன்படுத்துவதன் மூலம் வியூ ஒன்ஸ் வசதியைப் பயன்படுத்த முடியும். தற்போது ஐபோன் பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கிறது.

WhatsApp has rolled out its 'view once' feature for photos and videos

விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வியூ ஒன்ஸ் வசதி கிடைக்கப்பெறும் என்று, வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் இந்த வசதி உள்ள நிலையில், வாட்ஸ்ஆப் பயனாளர்கள் மத்தியில் இந்த வசதி வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்