உஷாரான வாட்ஸ் அப்!.. திடீரென ஸ்டேட்டஸ் மூலம் 'அதிரடி' அறிவிப்பு!.. குழப்பத்தில் பயனாளர்கள்!.. என்ன நடக்கிறது?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் தரவுகளை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரும் விதமாக அதன் தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களை முன்னெடுத்தது.

உஷாரான வாட்ஸ் அப்!.. திடீரென ஸ்டேட்டஸ் மூலம் 'அதிரடி' அறிவிப்பு!.. குழப்பத்தில் பயனாளர்கள்!.. என்ன நடக்கிறது?

அந்த கொள்கைகளுக்கு சம்மதம் கொடுக்காத பயனர்களின் கணக்குகள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதியோடு முடக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

இதையடுத்து சிக்னல், டெலிகிராம் மாதிரியான அப்ளிகேஷன்களை பயன்படுத்துமாறும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்து செய்தித்தாள்களில் முதற்பக்கத்தில் விளம்பரம் கொடுத்திருந்தது வாட்ஸ்அப். தொடர்ந்து தனியுரிமை கொள்கை குறித்து பயனர்களுக்கு ஸ்டேட்டஸ் மூலமாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் கொடுத்து வருகிறது.

"உங்கள் பிரைவஸிக்கு நாங்கள் பொறுப்பு, வாட்ஸ் அப்பில் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் இருப்பதால் நாங்கள் உங்களது சேட்களை வாசிக்கவோ, கவனிக்கவோ முடியாது.

உங்களது லொகேஷனையும் எங்களால் பார்க்க முடியாது; உங்களது போன் காண்டாக்ட் விவரங்களை ஃபேஸ்புக்குடன் வாட்ஸ் அப் பகிறாது" என அந்த ஸ்டேட்டஸில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்