'வாய்ப்பில்ல ராஜா'... 'கூகுள் நினைச்சாலும் முடியாது'... பட்டையை கிளப்பும் வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

உங்களது வாட்ஸ்-ஆப் சாட்டிங் மெசேஜ்-களை கூகுள் நினைத்தாலும் கண்காணிக்க முடியாத வகையில் புதியதொரு ஆப்ஷனை வாட்ஸ்அப் வழங்க உள்ளது. இது பயனாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வாய்ப்பில்ல ராஜா'... 'கூகுள் நினைச்சாலும் முடியாது'... பட்டையை கிளப்பும் வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்!

தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்ஆப் அத்தியாவசமான ஒன்றாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் பயனாளர்களின் குறித்த தகவல்களின் பாதுகாப்பிற்காக வாட்ஸ்ஆப் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் பயனாளர்களின் சாட்டிங் Backup தகவல்களைப் பயனாளர்களே பாதுகாத்து வைத்துக்கொள்ளும் வகையில் புதியதொரு பாஸ்வேர்டு ஆப்ஷன் அறிமுகமாகவுள்ளது.

இந்த பாஸ்வேர்டு முறை மூலம் உங்களின் சாட்டிங் என்க்ரிப்ட் (Encrypt) செய்யப்படும். இதன் மூலம் வாட்ஸ்ஆப் அல்லது கூகுளே நினைத்தாலும் கூட உங்கள் உரையாடல்களைக் கண்காணிக்க முடியாது. தற்போது இது பீட்டா வெர்ஷனில் சோதனையில் உள்ளது. இந்த பாஸ்வேர்டு முறை நடைமுறைக்கு வந்தால் ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் உரையாடல்களை restore செய்யும்போதும், உங்களிடம் பாஸ்வேர்டு கேட்கப்படும். பாஸ்வேர்டு தவறானால் Backup ஆப்ஷனைப் பயன்படுத்த முடியாது.

இதற்கிடையே  வாட்ஸ்ஆப்பின் அதிரடி திட்டமான, ''வாட்ஸ்ஆப் pay'' விரைவில் பயனாளர்களுக்கு வர இருக்கிறது. இந்தியாவில் இதற்கான சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் வாட்ஸ்ஆப் செயலி மூலமாகவே, உங்களுக்கான பணப்பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.

WHATSAPPUPDATE, WHATSAPP, GOOGLE, FACEBOOK, ENCRYPTED, WHATSAPP CHAT