"வாட்ஸ் ஆப் இல்லாத ஒருத்தர்.. வாட்ஸ் ஆப் பயனாளருடன் சாட் பண்லாம்!".. பேஸ்புக் மெசஞ்ஜருடன் இணையும் வாட்ஸ் ஆப்! ‘வேற லெவல்’ ப்ளான்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பேஸ்புக் மெசஞ்சரை வாட்ஸ்-ஆப்புடன் இணைத்து ஒன்றாக மாற்றும் திட்டம் பற்றி பரீசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"வாட்ஸ் ஆப் இல்லாத ஒருத்தர்.. வாட்ஸ் ஆப் பயனாளருடன் சாட் பண்லாம்!".. பேஸ்புக் மெசஞ்ஜருடன் இணையும் வாட்ஸ் ஆப்! ‘வேற லெவல்’ ப்ளான்!

பேஸ்புக் நிறுவனம் தன்னுடய கிளை நிறுவனமாக சில வருடங்களுக்கு முன்பு வாட்ஸ்-ஆப்பை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் மெசஞ்ஜரை மூன்றயும் ஒன்றாக்கி, மூன்று ஆப்களின் தொடர்புகளுடனும் சாட் செய்யுமாறு வசதியை உருவாக்கவுள்ளது.

கடந்த 2019ல் இதுபற்றி வாய்திறந்த மார்க் ஸக்கர் பர்க், பின்னாளில், இந்த திட்டம் உண்மைதான் என்று கூறினார். அதே சமயம்,  இதை செயல்படுத்துவதற்கு இந்த ஆண்டு முழுவதற்கும் எடுத்துக் கொள்ளலாம் என தெரிகிறது. இதன் மூலம் பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் மெசஞ்ஜர் தொடர்புகளை  ஒரு பயனாளர் ஒரே நேரத்தில் நிர்வகிக்க முடியும்.

உதாரணமாக வாட்ஸ்-ஆப்பில் ஒருவரை பிளாக் செய்திருந்தால், அதே பயனாளருக்கு உரிய மெசஞ்ஜர் ஆப்பிலும், அதே நபரை காட்டுவதில்லை. அதுமட்டுமில்லாமல், இதில் வாட்ஸ் ஆப் நம்பர் மட்டுமே இருக்கும் ஒரு பயனாளார், இன்ஸ்டாகிராம் மட்டுமே உடைய இன்னொரு பயனாளிரிடம் சாட் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்கள நிகழ்த்திக் கொள்ள முடியும், இதனால் வாட்ஸ் ஆப்பே இல்லாத ஒரு தொடர்பாளர், வாட்ஸ் ஆப் உடைய ஒருவரிடம் பேச முடியும் என்பது ஊர்ஜிதமாகிறது.

மற்ற செய்திகள்