ஏர்டெல், வோடபோன் 'கட்டணங்கள்' திடீர் உயர்வு.. டிசம்பர் 1 முதல் 'அமலுக்கு' வருகிறது!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஏர்டெல், வோடபோன்  ஐடியா நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.

ஏர்டெல், வோடபோன் 'கட்டணங்கள்' திடீர் உயர்வு.. டிசம்பர் 1 முதல் 'அமலுக்கு' வருகிறது!

ஜியோ வருகையால் ஏர்டெல், வோடபோன் இரு நிறுவனங்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அந்த வரிசையில் 2-வது காலாண்டில் இரண்டு நிறுவனங்களும் கூட்டாக 74 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதனால் தங்களது கட்டணத்தை உயர்த்த போவதாக இரண்டு நிறுவனங்களும் அறிவித்து உள்ளன.

இதுகுறித்து வோடபோன் நிறுவனம், ''நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. இதிலிருந்து மீளும் வழிவகைகளை முக்கிய கமிட்டி ஆராய்ந்து வருகிறது. சர்வதேச அளவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் இந்தியாவில்தான் மிகவும் குறைவு. இத்துறை இன்னும் மிகப்பெரிய வளர்ச்சி காணும். காரணம், அதற்கான தேவை அதிகம்,'' என தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தரமான சேவையினை வழங்கும் பொருட்டு கட்டணத்தை உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இரண்டு நிறுவனங்களும் கூட்டாக கட்டண உயர்வை அறிவித்துள்ளன. வருகின்ற டிசம்பர் 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதுகுறித்த விவரங்களை விரைவில் இரண்டு நிறுவனங்களும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.