Photoshop, Lightroom ஆப்ஸ்களை பயன்படுத்துகிறீர்களா? 'ரிஸ்க்' ஜாஸ்தி- மத்திய அரசு எச்சரிக்கை

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

அடோப் photoshop, lightrooms ஆகிய ஆப்ஸ்களைப் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் தான் ரொம்ப ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

Photoshop, Lightroom ஆப்ஸ்களை பயன்படுத்துகிறீர்களா? 'ரிஸ்க்' ஜாஸ்தி- மத்திய அரசு எச்சரிக்கை

இந்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி எமெர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் குழு ஓர் திடுக்கிடும் எச்சரிக்கைச் செய்தியை வெளியிட்டுள்ளது. போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஏடிட்டிங்கில் அதிகம் பயன்படுத்தப்படும் மென்பொருள் Adobe. அந்த நிறுவனத்தின் போட்டோஷாப், லைட்ரூம், பிரீமியர் புரோ உள்ளிட்ட செயலிகள் இந்திய அளவிலும் உலக அளவிலும் பலரால் எடிட்டிங்கிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

using adobe photoshop, lightrooms apps are severe risk

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அபாய எச்சரிக்கைச் செய்தியில், Adobe நிறுவனத்தின் பல செயலிகளை பயன்படுத்தும் பயனர்களின் கணினிகளை பல விதங்களில் ஹாக் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

using adobe photoshop, lightrooms apps are severe risk

இந்த பாதிப்பைத் தவிர்க்க அடோப் மென்பொருட்களைப் பயன்படுத்தும் பயனர்கள், உடனடியாக தங்களின் செயலிகளை அப்டேட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. எந்தெந்த செயலிகள் எல்லாம் ‘ஹை ரிஸ்க்’ பிரிவில் இருக்கிறது என்பது குறித்தான பட்டியல் இதோ:

using adobe photoshop, lightrooms apps are severe risk

* Adobe Premiere Rush version 1.5.16 and prior for Windows

* Adobe Experience Manager (AEM) version AM Cloud Service (CS) and prior for all

* Adobe Experience Manager (AEM) version 6.5.10.0 and prior for all

* Adobe Connect version 11.3 and prior for all

* Photoshop 2021 version. 22.5.3 and prior for Windows and macOS

* Photoshop 2022 version 23.0.2 and prior for Windows and macOS

* Adobe Prelude version 22.0 and prior for Windows

* Adobe After Effects version 22.0 and prior for Windows and macOS

* Adobe After Effects version 18.4.2 and prior for Windows and macOS

* Adobe Dimension version 3.4.3 and prior for Windows and macOS

* Adobe Premiere Pro version 22.0 and prior for Windows and macOS

* Adobe Premiere Pro version 15.4.2 and prior for Windows and macOS

* Adobe Media Encoder version 22.0 and prior for Windows and macOS

* Adobe Media Encoder version 15.4.2 and prior for Windows and macOS

* Lightroom version 4.4 and prior for Windows

* Adobe Audition version 22.0 and prior for Windows and macOS

* Adobe Audition version 14.4 and prior for Windows and macOS

TECHIE, ADOBE PHOTOSHOP, LIGHTROOM, ADOBE APPS, அடோப் போட்டோஷாப், மத்திய அரசு

மற்ற செய்திகள்