ரோபோவாக மாற போகும் இறந்த சிலந்திகள்??.. "அட, என்னங்க சொல்றீங்க??.." சபாஷ் போட வைத்த ஆய்வு முடிவுகள்!!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இன்று உலகைச் சுற்றி பல இடங்களில் புது புது கண்டுபிடிப்புகளும், புதுப்புது ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மனிதர்களின் வேலையை இன்னும் சுலபமாக்க பலவிதமான கண்டுபிடிப்புகளும் அசர வைக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
நாட்கள் செல்ல செல்ல மிக மிக வினோதமான, அதே வேளையில் அனைவருக்கும் பயன்படக்கூடிய கண்டுபிடிப்புகளும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், சில விஞ்ஞானிகள் தற்போது இறந்த சிலந்தி தொடர்பாக கண்டுபிடித்துள்ள கண்டுபிடிப்பு, பலரையும் அசர வைத்துள்ளது.
அமெரிக்காவில் அமைந்துள்ள ரைஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இறந்து போன சிலந்திகளை மெட்ரோபோட்டிக் சிலந்திகளாக மாற்றுவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதாவது, இறந்து போன ஒரு சிலந்தியை கிட்டத்தட்ட ரோபோ போல உருவாக்கக் கூடிய ஆராய்ச்சி தான் அது. இது தொடர்பான ஆராய்ச்சியின் அடிப்படையில் இறந்த சிலந்தியின் உடல்களை மிகக் குட்டியான ஒரு ரோபோ போல பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதர்கள் அல்லது மற்ற விலங்குகளை போல தசைகளால் தங்கள் கால்களை சிலந்தி இயக்குவது கிடையாது. ஏறக்குறைய ஒரு ஹைட்ராலிக் முறையில் தான் அவை பயன்படுத்தப்படுகிறது. சிலந்தியின் தலைக்கு அருகில் இருக்கும் ஒரு அறையில் இருந்து ரத்தம் அனைத்து கால்களுக்கும் பிரஷராகி பீச்சப்படுகிறது. இதன் மூலமாக தான், அதன் கால்கள் விரிவடைந்து ஒரு பொருட்களையோ அல்லது தங்களுக்கான இரைகளையோ பிடிக்கவும் தயாராகிறது. இதனை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இறந்த சிலந்தியின் உடலில் ரத்தத்துக்கு பதிலாக சிரிஞ்சு மூலம் ஒரு குறிப்பிட்ட காற்றை அழுத்தத்துடன் அனுப்பி பார்த்துள்ளனர்.
அப்படி காற்றை அனுப்பிய போது, அவை கால்களை விரிவடையச் செய்து ஒரு பொருளை பிடிக்கவும் தயாராகியது தெரிய வந்துள்ளது. இப்படி இறந்து போன சிலந்தியை பயன்படுத்தி சின்னஞ்சிறிய பொருட்கள் பலவற்றையும் பிடித்து தூக்கி பார்த்துள்ளனர். அதே வேளையில் தங்களது சொந்த எடையை விட 130 சதவீதம் அதிக எடை எடையையும் இறந்த சிலந்திகள் தூக்க முடியும் என்பது ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மேலும், எடையைப் பொறுத்தவரை ஒவ்வொரு சிலந்திக்கும் ஒரு குறிப்பிட்டத் திறன் இருக்கும் காரணத்தினால் சிலந்திக்கு சிலந்தி இது வேறுபட்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்த சிலந்திகளை ரோபோட் போல பயன்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சி கண்டுபிடிப்பு, பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.
Also Read | "என்ன, இதுக்காகவா 250 ரூபா 'Fine' போட்டாங்க??.." போலீஸ் கொடுத்த ரசீது பாத்து குழம்பிப் போன 'நெட்டிசன்கள்'!!
மற்ற செய்திகள்