'மாஸ்க்' போட்டுட்டு இத பண்றது 'ரொம்ப' கஷ்டம்... ஆனா இந்த 'போன்' வச்சுருந்தா... இனி அந்த 'தொல்லையே' இல்ல!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பொது இடங்களில் செல்லும் போது பாதுகாப்பிற்காக முகக்கவசங்களை அணிந்தே சென்று வருகின்றனர். இதனால் ஃபேஸ் ஐடி பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்வோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

'மாஸ்க்' போட்டுட்டு இத பண்றது 'ரொம்ப' கஷ்டம்... ஆனா இந்த 'போன்' வச்சுருந்தா... இனி அந்த 'தொல்லையே' இல்ல!

இந்நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஐ போனின் ஐஓஎஸ் 13.5 அப்டேட்டில் இதற்கான தீர்வு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஃபேஸ் ஐடியை பயன்படுத்தும் ஐ போன் பயனாளர்கள் இந்த அப்டேட் மூலம் பயன்பெறுவர். வரவிருக்கும் இந்த புதிய அப்டேட்டில் மாஸ்க் அணிந்திருப்பது தெரிந்தால் தானாகவே பாஸ்வேர்டு பின் கேட்கும். அதைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்துகொள்ளலாம்.

இதோடு முன்பு தெரிவித்திருந்தபடி கூகுளுடன் இணைந்து ஆப்பிள் முன்னெடுக்கும் கான்டக்ட் ட்ரெஸிங்கிற்கான API-ம் இதில் இடம்பெறும். அது மட்டுமில்லாமல் முன்னதாக இருந்த சிறு சிறு கோளாறுகளும் இந்த அப்டேட்டில் சரி செய்யப்படும். இந்த அப்டேட்டை ஐபோன் பயனாளர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம். ஐ போன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பினால் ஐ போன் பயனாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.