‘இனி அனுமதி இல்லாமல் இப்படி எல்லாம் பண்ணவே முடியாது’.. பதவியேற்ற முதல் நாளே ‘அதிரடி’ காட்டிய டிவிட்டர் சிஇஓ..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பதவி ஏற்ற அகர்வால் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ஜாக் டோர்சி. இவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால் என்பவர் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு டிவிட்டரில் மென்பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். இதனை அடுத்து 2017-ம் ஆண்டு தலைமை தொழில்நுட்ப தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சிஇஓவாக பதவியேற்றதும் பராக் அகர்வால் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். அதில், தனிப்பட்ட நபரின் புகைப்படம், வீடியோ, முகவரி, மொபைல் எண், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பராக் அகர்வால் முன்பே ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பதவி ஏற்ற ஒரே நாளில் அதை நிறைவேற்றி அதிரடி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Beginning today, we will not allow the sharing of private media, such as images or videos of private individuals without their consent. Publishing people's private info is also prohibited under the policy, as is threatening or incentivizing others to do so.https://t.co/7EXvXdwegG
— Twitter Safety (@TwitterSafety) November 30, 2021
மற்ற செய்திகள்