சுந்தர் பிச்சை டூ பரக் அக்ரவல்… சர்வதேச அளவில் அசத்தி வரும் டெக் உலகின் டாப் ‘இந்திய’ சிஇஓ-க்கள்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

உலகின் பெரும் நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ், ஐபிஎம் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்களுக்கும் சிஇஓ-க்களாக இந்தியர்களே உள்ளனர். இவ்வாறு அசத்தி வரும் சில டாப் சிஇஓ-க்கள் குறித்துப் பார்ப்போம்.

சுந்தர் பிச்சை டூ பரக் அக்ரவல்… சர்வதேச அளவில் அசத்தி வரும் டெக் உலகின் டாப் ‘இந்திய’ சிஇஓ-க்கள்..!

சுந்தர் பிச்சை, சிஇஓ, ஆல்ஃபபெட்:

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் கூகுள் சிஇஓ ஆகக் கருதப்படும் சுந்தர் பிச்சை. கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி கூகுள் சிஇஓ ஆக சுந்தர் பிச்சர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். கூடுதலாக ஆல்ஃபபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆகவும் பிச்சை அறிவிக்கப்பட்டு இருந்தார். முன்னர் சுந்தர் பிச்சை தான் ஆன்றாய்டு, க்ரோம், மேப்ஸ் மற்றும் பல கூகுள் தயாரிப்பு ஆப்ஸ்களின் தயாரிப்புப் பிரிவு தலைவராகப் பணியாற்றியவர்.

Top Tech CEO’s who are from India rules the world

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் பி.டெக் படிப்பை நிறைவு செய்தவர். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் மற்றும் வார்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ ஆகிய படிப்புகளை நிறைவு செய்துள்ளார்.

சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட்:

சத்யா நாதெள்ளா கடந்த 1992-ம் ஆண்டு மைக்ரோசாஃப் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து கடுமையாக உழைத்து கடந்த 2014-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆக பொறுப்பு ஏற்றார். ஹைதராபாத்தில் பிறந்தவரான 52 வயது நாதெள்ளா மணிபால் டெக் கல்லூரியில் பி.இ., விஸ்கான்சின் பல்கலையில் எம்.எஸ்., சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ ஆகிய படிப்புகளை நிறைவு செய்துள்ளார்.

Top Tech CEO’s who are from India rules the world

சாந்தனு நாரயண், சிஇஓ, அடோப்:

ஹைதராபாத்தில் பிறந்தவர் ஆன சாந்தனு நாராயண் தனது பயணத்தை ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து தான் தொடங்கினார். கடந்த 1998-ம் ஆண்டு அடோப் நிறுவனத்தில் மூத்த துணை தலைவர் ஆக இருந்த சாந்தனு, பின்னர் 2005-ம் ஆண்டு சிஓஓ மற்றும் 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தில் சிஇஓ ஆனார். ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி., கலிபோர்னியா பல்கலையில் எம்பிஏ, பவுலிங் க்ரீன் ஸ்டேட் பல்கலையில் இருந்து எம்.எஸ்., நிறைவு செய்துள்ளார்.

அரவிந்த் கிருஷ்ணா, சிஇஓ, ஐபிஎம்:

ஐஐடி கான்பூரில் எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் படிப்பை நிறைவு செய்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் ஐபிஎம் சிஇஓ ஆக அரவிந்த் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். கடந்த 30 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் அரவிந்த் கிருஷ்ணா.

Top Tech CEO’s who are from India rules the world

பரக் அக்ரவல், சிஇஓ, ட்விட்டர்:

நேற்று புதிய சிஇஓ ஆக இந்தியாவைச் சேர்ந்த பரக் அக்ரவல் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆகப் பதவி ஏற்ற்க்கொண்டார். உலகின் மிகப்பெரும் டெக் நிறுவனங்களின் சிஇஓ-க்களுள் 37 வயதான பரக் அக்ரவல் ஒரு இளம் சிஇஓ ஆக இணைந்துள்ளார். பரக் அக்ரவால் பாம்பே ஐஐடி கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பை நிறைவு செய்தவர். உலகின் மிகப்பெரும் டெக் நிறுவனங்களின் சிஇஓ-க்களுள் 37 வயதான பரக் அக்ரவால் ஒரு இளம் சிஇஓ ஆக இணைந்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க்-க்குக் கூட 37 வயது தான் ஆகிறது.

TWITTER, TWITTER CEO, INDIAN CEOS

மற்ற செய்திகள்