'ஹெட்போன் பிரியர்களுக்கு அசத்தலான அப்டேட்'... 'சோனியின் மாஸான வரவு'... விலை குறித்து வெளியான அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்சோனி நிறுவனத்தின் WF-H800 ஹெட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயர் இல்லாமல் சார்ஜிங் பாக்ஸ் வசதியுடன் வந்திருக்கும் இந்த ஹெட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. WF-H800 ஹெட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 மணிநேரம் பயன்படுத்தலாம். அதாவது 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 70 நிமிடங்கள் தாராளமாகப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
ஹெட்செட்டில் 8 மணிநேரம் வரைக்கும் பயன்படுத்தக்கூடிய பேட்டரி வசதி இருக்கிறது. இதுதவிர சார்ஜிங் பாக்ஸில் 8 மணிநேரம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம். இதில் டிஜிட்டல் ஒலி மேம்பாட்டு இயந்திரம் இருப்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும். இதனால் அதன் கேட்கும் ஒலி திறனை மேம்படுத்திக் கொடுக்கிறது. இந்த ஹெட்செட்டை காதில் மாட்டியிருந்தால் தானாக ஆன் ஆகும். தாமதமின்றி புளூடூத் பரிமாற்றமும் செய்துகொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் என எதில் பயன்படுத்தினாலும் கூகுள் அசிஸ்டண்ட், அலெக்ஸா, சிரி என அனைத்துக்கும் சப்போர்ட் செய்யும். மேலும் ப்ளே ஸ்டோரில் சோனி ஹெட்போன் இணைப்பு செயலியைத் தரவிறக்கம் செய்து ஹெட்போனுடன் இணைத்துக்கொள்ளலாம். இதன் எடை என்பது 7.6 கிராம் மட்டுமே இருப்பதால், மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்விலை தற்போது இந்திய மதிப்பில் ரூ.14,990 ஆக நியமிக்கப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் சோனி கடைகளில் இந்த ஹெட்செட்டை வாங்கிக் கொள்ளலாம்.
மற்ற செய்திகள்