விண்வெளியில் 'உடலுறவு' வச்சிக்க முடியுமா...? 'ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு...' - 'ஷாக்' தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்...!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

விண்வெளியில் பல விஷயங்கள் இன்னும் மாயமாக இருக்கும் நிலையில் இப்போது விண்வெளியில் உடலுறவு கொள்ளமுடியுமா என்ற கேள்வி கிளம்பியுள்ளது.

விண்வெளியில் 'உடலுறவு' வச்சிக்க முடியுமா...? 'ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு...' - 'ஷாக்' தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்...!

பொதுவாகவே நம்மில் பலருக்கு விண்வெளியில் எப்படி இருக்கும், புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளி வீரர்கள் அங்கு எப்படி இருப்பார்கள் என்று தோன்றும். இதுக்குறித்து பல வீடியோக்களும், விண்வெளி வீரர்களின் இன்டெர்வியூகளையும், புகைப்படங்களையும் பார்திருந்தாலும் நாம் அங்கு சென்றால் மட்டுமே அதை முழுமையாக அனுபவிக்கமுடியும்.

இன்றைய நவீன காலகட்டத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை சுமார் 500 பேர் விண்வெளியில் காலடி எடுத்து வைத்துள்ளனர் என சான்றுகள் இருந்தாலும் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விண்வெளியில் உடலுறவு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுக்குறித்து பல சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'டெய்லி ஸ்டார்' அறிக்கையின்படி, பிரெஞ்சு அறிவியல் எழுத்தாளர் Pierre Kohler தனது 'The Final Mission: Mir, the Human Adventure' என்ற புத்தகத்தில் 1996 வாக்கில், ஒரு ஜோடி விண்வெளியில் உடலுறவு கொண்டதாகக் கூறியுள்ளார்.

அதோடு இதற்குமுன் விண்வெளியில் STS-XX என்ற குறியீட்டுப் பெயருடன் நாசா NASA இதற்கான ரகசியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்று கோஹ்லர் கூறினார். நாசாவோ கோஹ்லரின் கூற்றுக்களை நிராகரித்து, அத்தகைய பரிசோதனை எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளது.

மேலும் இதுக்குறித்து விளக்கமளித்துள்ள பயோமெடிக்கல் ப்ராப்ளம்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் துணைத் தலைவர் வலேரி போகோமோலோவ் (Valery Bogomolov) 'பொதுவாக விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி ஒரு சூழலில் விண்வெளி வீரர்கள் மனிதர்களாக இருக்கும் பட்சத்தில், விண்வெளியில் உடலுறவு  என்பது எப்படி நடந்திருக்கும்.

அங்கு உடலுறவு கொள்வதில் பல தடைகள் இருக்கும். குறிப்பாக ஆண்களுக்கு. ஏனெனில் மேலே புவிஈர்ப்பு இல்லாததன் காரணத்தால்,  விறைப்புத்தன்மை இருக்காது, அதற்காக அவர்கள் போராட வேண்டியிருக்கும்' எனக்கூறியுள்ளார்.

SCIENTISTS, SEX, SPACE, ZERO-GRAVITY, உடலுறவு, விண்வெளி

மற்ற செய்திகள்