அமெரிக்காவின் பிரபல நிறுவனத்துக்கு கைமாறும் ‘TikTok’.. கெடு விதித்த கடைசி நாளில் நடந்த ‘டீலிங்’..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டிக்டாக்கை கையகப்படுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனம் ஆரக்கிளுடன் டிக்டாக் நிறுவனம் வெற்றிகரமாக பேச்சுவார்த்தையை முடித்துள்ளது.
பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்தின் டிக்டாக் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அமெரிக்க அரசு அச்செயலியை தடை செய்தது. இதனை அடுத்து டிக்டாக்கை செப்டம்பர் 15ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் கெடு விதித்திருந்தார்.
இதனை அடுத்து டிக்டாக்கை விலைக்கு வாங்க மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய இரு நிறுவனங்கள் போட்டி போட்டன. இதனிடையே டிக்டாக்கை ஆரக்கிள் நிறுவனம் வாங்குவது தான் சரியாக இருக்கும் என்றும், மற்றவர்களை விடவும் ஆரக்கிள் நிறுவனத்துக்கு தான் டிக்டாக்கை நிர்வகிக்கும் திறன் இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இதனை அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டிக்டாக் விற்கப்படாது என பைட்டான்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக்குடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிக்டாக் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்துக்கு இடையே முடிந்துள்ள ஒப்பந்தத்தை இந்த வாரம் மதிப்பாய்வு செய்யவுள்ளதாக அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்