'அடப்பாவிகளா..'.. 'லாகின் பண்ணது குத்தமா'.. '2.28 லட்ச ரூபாய லாவிட்டீங்களே'.. உறைய வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவருக்கு வந்த போன் காலினால், வட இந்திய நபர் ஒருவர், 2 கோடியே 28 லட்சம் ரூபாய் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

'அடப்பாவிகளா..'.. 'லாகின் பண்ணது குத்தமா'.. '2.28 லட்ச ரூபாய லாவிட்டீங்களே'.. உறைய வைக்கும் சம்பவம்!

முன்னதாக, தனது மனைவிக்கு ஆன்லைனின் லாகின் செய்து, அதன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய முற்பட்ட கணவருக்கு, அந்த பணப்பரிவர்த்தனை நிகழாததால், சந்தேகம் அடைந்த நபர், உடனே தனது வங்கிக்கு போன் செய்து தனது கணக்கை முடக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், அவர் கேட்டதற்காக டெபிட் கார்டினை மட்டும் பிளாக் பண்ணிய அந்த வங்கி, அந்த நபரது ஆன்லைன் பேங்கிங்க் கணக்கை முடக்காமல் விட்டுவிட்டிருக்கிறது. அவ்வளவுதான், அடுத்த சில நொடிகளிலே, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 2.28 லட்ச ரூபாயை துடைத்து எடுத்துள்ளனர்.

முன்னதாக ஆன்லைனின் உணவு ஆர்டர் பண்ணிய பிறகு, உணவு டெலிவரி ஆப்பின் சப்போர்ட் லைனில் சாட் செய்துள்ளார் இந்த நபர். அந்த சமயத்தில்தான், ஹேக்கர்கள் உள்நுழைந்து, கஸ்டமர் சப்போர்ட் டெஸ்க்கில் இருந்து பேசுவது போலவே பேசி, கஸ்டமரின் முழு நெட் பேங்கிங் விபரங்களையும் சிறிது சிறிதான லாஜிக்குகளை பேசி வாங்கியுள்ளனர்.

இதேபோல், சமீபத்தில் சென்னையிலும் மாணவி ஒருவர் 70 ரூபாய் பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு, ஹேக்கர்களிடம் 40 ஆயிரம் ரூபாய் இழந்தது குறிப்பிடத்தக்கது.

ONLINETRANSACTION, NETBANKING, HACKERS