அறிமுகம் ஆனது நத்திங் போன் (1).. வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்.. உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஸ்மார்ட்போன் சந்தையில், அவ்வப்போது புது புது மாடல்களில் நிறைய மொபைல் போன்கள் சந்தையில் விற்பனைக்கு வந்து கொண்டே இருக்கும்.

அறிமுகம் ஆனது நத்திங் போன் (1).. வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்.. உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்

Also Read | சல்மான் கானை கொலை செய்ய 4 லட்சம் ரூபாய்க்கு துப்பாக்கி??.. பீதியை ஏற்படுத்திய குற்றவாளியின் வாக்குமூலம்??.. அதிர வைக்கும் பின்னணி

இதில், சில போன் குறித்த அறிவிப்பு வெளிவரும் போது, அதன் அறிமுக நாளை மிக ஆவலுடன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

அந்த வகையில், நீண்ட காத்திருப்புக்கு பின்னர், நத்திங் போன் (1) (Nothing Phone 1) தற்போது அறிமுகமாகி  உள்ளது. இந்த போனின் விலை, சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்தையும் குறித்து இந்த செய்திகளில் விரிவாக பாப்போம்.

அறிமுகமான நத்திங் போன் (1)

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில் நுட்ப பொருட்களை உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவனம், ஹெட் செட்களை விற்பனை செய்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் தான், தங்களின் முதல் போன் குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதம், நத்திங் நிறுவனம் அறிவித்திருந்தது. அன்று முதலே, போன் எப்போது வெளியாகும் என்பது தான், பலரின் ஆவலாக இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம், அதன் நிறுவனரான கார் பெய் (Carl Pei) தான்.

nothing phone 1 launched in india and other countries

இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, நத்திங் நிறுவனத்தை அவர் தொடங்கி இருந்தார். இந்நிலையில், தற்போது இந்த நிறுவனத்தின் முதல் போனான நத்திங் போன் 1, இந்தியா உட்பட உலகம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த போனை வாங்கிக் கொள்ள, 2000 ரூபாய் முன்பணம் செலுத்தி புக் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

nothing phone 1 launched in india and other countries

சிறப்பம்சங்கள்

நத்திங் போன் (1) கருப்பு, வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 778+ புராசஸர், சிறந்த இரண்டு 50 மெகாபிக்சல் கேமரா, வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளது. மேலும், ரூ.29,999 விலையில் 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டையும், ரூ.32,999-க்கு 8/256ஜிபி வேரியண்டையும், ரூ.35,999 விலையில் 12/256ஜிபி வேரியண்டையும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

nothing phone 1 launched in india and other countries

இந்த போனில், 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது. 4,500 mAh பேட்டரியும் இதில் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் இந்த போனின் பாக்ஸில் சார்ஜர் இடம்பெறவில்லை. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் இதில் உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3 மைக்ரோபோன்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்று உள்ளன. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 3 வருடத்துக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளது.

Also Read | "Dealing எல்லாம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்'ல தான்.." இளைஞர்கள் செய்து வந்த காரியம்.. பரபரப்பில் மதுரை

NOTHING PHONE 1, INDIA, OTHER COUNTRIES, NOTHING PHONE 1 LAUNCHED IN INDIA

மற்ற செய்திகள்