இத கண்டுபுடிச்சா ‘15 லட்சம் பரிசு’ உங்களுக்குதான்.. நாசாவின் ‘அசத்தல்’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்நிலாவிற்கான கழிவறையை வடிவமைப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசு வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.
வரும் 2024ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு வருகிறது. முந்தைய கால விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்களின் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சந்தித்த சிக்கல்களுக்கு தீர்வு காண நாசா திட்டமிட்டுள்ளது.
அதனால் மைக்ரோ ஈர்ப்பு விசை மட்டுமின்றி, எதிர்கால சந்திர லேண்டர் விண்கலத்தில் நிலவின் ஈர்ப்பு விசை சக்தியிலும் பயன்படுத்தக் கூடிய கழிவறையை வடிவமைக்க நாசா அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முதல் பரிசாக இந்திய மதிப்பில் 15 லட்சம், இரண்டாம் பரிசு 7 லட்சத்து 50 ஆயிரம், மூன்றாவது பரிசு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் ஜூனியர் பிரிவில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்