VIDEO: 'என் சாமி... நீ நல்லா இருக்கியாடி தங்கம்?'.. '4 வருடங்களுக்கு முன் மரணித்த மகளை... மீண்டும் சந்தித்த 'தாய்'... இதயத்தை ரணமாக்கும் பாசப் போராட்டம்!'
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கொரிய நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், விர்சுவல் ரியாலிட்டி (virtual reality) தொழில்நுட்பம் மூலம் 4 வருடங்களுக்கு முன் மரணித்த தனது 7 வயது குழந்தையை தாய் சந்திக்கும் காட்சி பார்வையளர்களை கலங்கடித்துள்ளது.
விர்சுவல் ரியாலிட்டி என்பது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். இல்லாத ஒன்றை உருவாக்குவதும், அதற்கென ஒரு தனி உலகத்தை படைத்து, அதற்குள் நாம் பயணித்து அந்த மாய உலகத்தோடு உரையாடச் செய்வதும் தான், இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம். அந்த வகையில், கொரிய நாட்டில் உள்ள ஊடகத்தில் இந்த தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டது.
Meeting you (உன்னைச் சந்தித்தல்) என்று பெயரிடப் பட்ட அந்த நிகழ்ச்சியில், ஒரு பெண் கலந்து கொண்டார். கடந்த 2016ம் ஆண்டு, தன்னுடைய பாச மகளை, ஒரு மர்ம நோயிடம் அந்தத் தாய் பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து, இறந்து போன குழந்தையிடம் விர்சுவல் ரியாலிட்டி மூலம் தாய் உரையாடும் வகையில், அது வடிவமைக்கப்பட்டிருந்தது.
விர்சுவல் ரியாலிட்டி உலகத்திற்குள் தாய் நுழைந்ததும், அந்த குழந்தையைக் கண்ட தாய் கதறி அழுதார். இருவருக்குமான உரையாடல் நீண்டு கொண்டே செல்கிறது. குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் தாயின் பாசப் போராட்டம், சுற்றி இருந்த அனைவரின் மனதையும் ரணமாக்கியது.