ஜியோ 'ரீசார்ஜ்' பண்ண போறீங்களா?.. இந்த 'ப்ரோமோகோட்' யூஸ் பண்ணுங்க.. 'செம' டிஸ்கவுண்ட்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஜியோவும், பேடிஎம்மும் இணைந்து ஜியோவின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களுக்கு 50 தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் ஜியோ அறிமுகப்படுத்திய ரூ.444, ரூ.555 ரீசார்ஜ்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது.

ஜியோ 'ரீசார்ஜ்' பண்ண போறீங்களா?.. இந்த 'ப்ரோமோகோட்' யூஸ் பண்ணுங்க.. 'செம' டிஸ்கவுண்ட்!

நீங்கள் இந்த இரண்டு திட்டங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்தால் முறையே ரூபாய் 44 மற்றும் ரூபாய் 55 ஆகியவற்றை தள்ளுபடியாக பெறலாம். நீங்கள் பேடிஎம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த தள்ளுபடி உங்களுக்கு கிடைக்கும்.இந்த ரீசார்ஜ்களில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்ததும், பேடிஎம் ஆப்பில் உங்கள் எண்ணை உள்ளிட்டு, ரூ.444 ரீசார்ஜில் SHUBHP44 எனும் ப்ரோமோகோடை  பயன்படுத்த நீங்கள் ரூ.44 தள்ளுபடியை பெறுவீர்கள்.

அதே போல, ரூ.555 ரீசார்ஜில் SHUBHP50 எனும் ப்ரோமோகோடை பயன்படுத்த நீங்கள் ரூ.55 தள்ளுபடியை பெறுவீர்கள்.இந்த ப்ரோமோகோடுகளை ஒருமுறை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். அடுத்தடுத்த ரீசார்ஜ்களுக்கு நீங்கள் இதனை பயன்படுத்த முடியாது.

ரூ.444-க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற ஜியோ அழைப்புகள், 1000 ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 84 நாட்களுக்கு வழங்குகிறது.ரூ.555-க்கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ அழைப்புகள், 3000 ஜியோ அல்லாத அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 84 நாட்களுக்கு வழங்குகிறது.