இந்த தேதிக்கு முன்னாடி ரீசார்ஜ் பண்ணீங்களா..? ‘அப்போ உங்களுக்கு 6 பைசா கட்டணம் கிடையாது’ ஜியோ அறிவுப்பு..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவுப்பு ஒன்றை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது
சில தினங்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களிடம் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இது ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ஜியோ பயனர்களுக்கு இடையேயான கால்ஸ்களுக்கு இது இலவசம் என்றும் மற்ற நெட்வொர்க்கிற்கான அவுட்கோயிங் கால்ஸ்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்தது. ஆனால் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் அனைத்து நெட்வொர்க்கின் அவுட்கோயிங் கால்ஸ்களும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் அக்டோபர் 9 -ம் தேதிக்கு முன்னர் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படாது என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்துள்ள திட்டம் காலாவதி ஆகும் வரை அவுட்கோயிங் கால்ஸ் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
An important update for all Jio users. pic.twitter.com/TR04y92wmC
— Reliance Jio (@reliancejio) October 10, 2019