உங்க 'இஷ்டத்துக்கு' எல்லாம் வைக்க முடியாது.. இனி இதுதான் 'ரிங்கிங்' டைம்.. டிராய் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

நமது மொபைலில் இருந்து நாம் வேறொருவருக்கு அழைக்கும் போது அந்த அழைப்பை ஏற்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவு ரிங்கிங் நேரம் எனப்படுகிறது. இந்தியாவில் இது 45 வினாடிகளாக இருந்தது.

உங்க 'இஷ்டத்துக்கு' எல்லாம் வைக்க முடியாது.. இனி இதுதான் 'ரிங்கிங்' டைம்.. டிராய் அதிரடி!

திடீரென ஜியோ நிறுவனம் இந்த ரிங்கிங் டைமை 20 வினாடிகளாக குறைத்தது. இதன் மூலம் பிற நெட்வொர்க்குகளில் இருந்து வரும் மிஸ்டு கால்களை இன்கம்மிங் கால்களாக ஜியோ மாற்றிக்கொண்டு அதற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது.

இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் டிராயிடம் குற்றம் சாட்டியிருந்தது. தொடர்ந்து இதுகுறித்து நடந்த பஞ்சாயத்தில் ஏர்டெல் நிறுவனம் ரிங்கிங் டைமை 25 நொடிகள் வைக்க சொன்னது, வோடபோன் 30 வினாடிகள் வைக்க  சொல்லி கோரிக்கை விடுத்தது.ஜியோ 20 நொடிகளே போதும் என வாதிட்டது.

இந்தநிலையில் அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் நிறுவனங்களின் இன்கம்மிங் கால்களுக்கான ரிங்கிங் டைம் கால அளவை 30 வினாடிகளாக நிர்ணயித்து டிராய் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று, லேண்ட்லைன் வசதிகளுக்கான ரிங்கிங் டைமிங் கால அளவை ஒரு நிமிடமாக நிர்ணயித்தும் டிராய் உத்தரவிட்டுள்ளது.