அந்த '6 பைசா'வுக்கு நீங்க தான் காரணம்.. உங்கள மாதிரி 'ஏமாத்த' மாட்டோம்.. செம சண்டை!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இனிமேல் இலவச குரல் அழைப்புகள் கிடையாது என ஜியோ அறிவித்ததை தொடர்ந்து, வாய்ஸ் கால்கள் முற்றிலும் இலவசம் என ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவித்தன.இதைத்தொடர்ந்து மாறிமாறி இந்த நிறுவனங்கள் அனைத்தும் ட்விட்டரில் சண்டை போட்டு வருகின்றன. இதனால் ட்விட்டரே அமளிதுமளியாகி கிடக்கிறது.
For some, unlimited means something else. For us, unlimited voice calls have always meant truly unlimited voice calls. Switch to Airtel now. https://t.co/Xd7kpsF8ky#AbTohSahiChuno pic.twitter.com/eiiKGzmqs9
— airtel India (@airtelindia) October 10, 2019
இதுகுறித்து ஏர்டெல்,''சிலருக்கு வரம்பற்றது என்றால் வேறு ஏதோ ஒன்று போல. எங்களைப் பொறுத்தவரை, வரம்பற்ற குரல் அழைப்புகள் எப்போதும் உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகளை மட்டுமே குறிக்கும். இப்போதே ஏர்டெல் சேவைக்கு மாறவும்,'' என்று ஜியோவை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டது.
#FreeMeansFree pic.twitter.com/9XbuTDQ43W
— Vodafone (@VodafoneIN) October 14, 2019
இதைத்தொடர்ந்து வோடபோன் நிறுவனம்,'' வோடபோனின் வரம்பற்ற திட்டங்களில் உண்மையான இலவசங்கள்,'' என ஜியோவை வறுத்து எடுத்தது. பதிலுக்கு ஜியோ,'' 6 பைசா நாங்கள் கேட்கவில்லை. அவர்கள் கேட்கிறார்கள்,'' என ஏர்டெல்லை தாக்கியது. இவ்வாறு ட்விட்டரில் மாறிமாறி 3 நிறுவனங்களும் சண்டை போட்டு வருகின்றன.
It’s your call.#IUC #JioDigitalLife #LifeIsBeautiful #JioOnIUC pic.twitter.com/6KPuqJTI0A
— Reliance Jio (@reliancejio) October 12, 2019
ஜியோ வருகைக்கு முன்னால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் டேட்டாவுக்கு அதிக வசூல் செய்ததும், ஜியோவின் வருகைக்கு பின்னர் அது குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.