‘இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபேவரிட் வசதி நீக்கம்’.. ‘ஏமாற்றத்தில் பயனாளர்கள்’..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இன்ஸ்டாகிராமில் ஃபாலோயிங் என்ற டேப் நீக்கப்பட்டுள்ளது பயனாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபேவரிட் வசதி நீக்கம்’.. ‘ஏமாற்றத்தில் பயனாளர்கள்’..

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல செயலிகளில் ஒன்றாக உள்ளது இன்ஸ்டாகிராம். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலரின் விருப்பமான ஃபாலோயிங் டேப் வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளது.

ஃபாலோயிங் என்ற டேப் மூலம் பயனாளர்கள் தங்களுடைய நண்பர்கள் எதை லைக் செய்கிறார்கள், யாரைப் பின் தொடர்கிறார்கள், எதற்கு கமெண்ட் செய்கிறார்கள் ஆகியவற்றைப் பார்க்க முடியும். இதுவரை நண்பர்கள், பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என இதன்மூலம் எளிதாகப் பார்த்து வந்த பயனாளர்கள் பலருக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சில பயனாளர்கள் முன்பைவிட நிம்மதியாக செயலியைப் பயன்படுத்த முடியும் என இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

INSTAGRAM, FOLLOWING, TAB, USER, ACTIVITY, FACEBOOK