என்னது இனி ‘Instagram Reels’ பார்க்க காசு கட்டணுமா..? வரப்போகும் ‘புது’ அப்டேட்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இன்ஸ்டாகிராம் Reels-ஐ பயனர்கள் இனி கட்டணம் செலுத்தி பார்க்கும்படியான அப்டேட் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் தங்களது தனித்திறமையை வெளிகாட்டும் வகையில் Reels என்ற வசதி உள்ளது. இதன்மூலம் பலரும் பிரபலமாகி வருகின்றனர். இந்த சூழலில் இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்களுக்கு வருமானம் வரும் வகையில், இனி பார்வையாளர்கள் Reels-ஐ சந்தா செலுத்தி பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்காவின் பிரபலமான 10 கிரியேட்டர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் ஆலன் சிக்கின் ஷா, பேஸ்கட் பால் பிளேயர் செடோனா பிரின்ஸ், மாடல் க்ளேஷி குக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் உள்ள ப்ரோபைல் பக்கத்தில் இருக்கும் சப்ஸ்கிரைப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் இதில் இணைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாத சந்தாவாக இந்திய மதிப்பில் ரூ.89 இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் நிறுவனம், ‘இந்த சேவை மூலமாக கிரியேட்டர்கள் தங்கள் பார்வையாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருக்க முடியும். ஏற்கனவே இயங்கும் தளத்தில் சந்தாதாரர்களுக்கு பிரத்தியேக வீடியோக்களை வழங்குவதன் வாயிலாக கிரியேட்டர்கள் தங்கள் வருவாயை அதிகரித்துக்கொள்ள முடியும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக ட்விட்டரில் இருக்கும் ட்விட்டர் ப்ளூ சேவை இதேபோல் சந்தா கட்டி பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியது. அதேபோல் பேஸ்புக் குழுமத்தில் உள்ள இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற சந்தா முறை நடைமுறைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்