‘இனி கொண்டாட்டம் தான்’.. மீம்ஸ் மூலம் பயனர்களுக்கு ‘செம’ அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் அசத்தலான புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘இனி கொண்டாட்டம் தான்’.. மீம்ஸ் மூலம் பயனர்களுக்கு ‘செம’ அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்..!

சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள ரீல்ஸ் (Reels) அம்சத்தை பயனர்கள் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக ரீல்ஸ் அம்சத்தின் வீடியோ கால அளவை 30 நொடிகளில் இருந்து 60 நொடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு மீம்ஸ் மூலம் இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

Instagram increases time duration of Reels

மேலும் ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும் கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சமும் இன்ஸ்டாகிராமில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சத்தில் பரவலாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும், அதனால் வெளிநாடுகளில் மட்டுமே இது வழங்கப்பட்டு வந்தது.

Instagram increases time duration of Reels

தற்போதைய அப்டேட்டில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரீல்ஸ் அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த மாற்றம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்