டிவிட்டர் நிறுவனத்தின் புதிய ‘சிஇஓ’ ஆன இந்தியர்.. யார் இவர்..? வெளியான சுவாரஸ்ய தகவல்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிலிருந்து ஜாக் டோர்சி விலகியதை அடுத்து இந்தியர் ஒருவர் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தின் புதிய ‘சிஇஓ’ ஆன இந்தியர்.. யார் இவர்..? வெளியான சுவாரஸ்ய தகவல்..!

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜாக் டோர்சி (Jack Dorsey) செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்து வரும் இந்தியரான பராக் அகர்வால் (Parag Agrawal) டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Indian-Origin Parag Agrawal becomes Twitter CEO

கடந்த 2011-ம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக பராக் அகர்வால் சேர்ந்தார். இதனிடையே டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவராக (CTO) இருந்த ஆடம் மெசிஞ்சர் அப்பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அப்பொறுப்புக்கு தலைவராக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

Indian-Origin Parag Agrawal becomes Twitter CEO

பராக் அகர்வால், மும்பை ஐஐடி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார் மேலும் மைக்ரோசாப்ட், யாஹூ போன்ற நிறுவனங்களில் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக தன்னை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TWITTER, PARAGAGRAWAL, JACKDORSEY, CEO

மற்ற செய்திகள்