WhatsApp status-ஐ வச்சவங்களுக்கு தெரியாம ரகசியமாக பார்க்கணுமா? அப்போ Trick-ஐ யூஸ் பண்ணி பாருங்க..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ரகசியமாக பார்க்க வாட்ஸ்அப் செயலியில் அதற்கென சிறப்பு அம்சம் ஒன்று உள்ளது.
வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் (WhatsApp status) போடுவதை பலர் பழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு சிலர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போடாவிட்டாலும் மற்றவர்கள் போடும் ஸ்டேட்டஸை பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை யார் யார் பார்த்துள்ளனர் என்பதும் காண்பிக்கப்படும்.
இப்படி இருக்கையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நாம் ரகசியமாக பார்க்க வாட்ஸ்அப் செயலியில் வசதி உள்ளது. அதற்கு நாம் மற்ற செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வாட்ஸ்அப்பிலேயே அதற்கான சிறப்பு அம்சம் உள்ளது.
வாட்ஸ்அப்பின் வலது மூலையில் மேலே இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் செட்டிங்ஸில் (settings) உள்நுழைந்து அக்கவுண்ட் (account) என்பதை தேர்வு செய்து Privacy-ல் இருக்கும் Read Reciepts என்ற முறை ஆப் செய்யவும் (Settings-->Account-->Privacy-->Read Reciepts - Disable).
இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது மற்றவர்களுக்கு தெரியாது. மேலும் இந்த முறையினால் ஒருவருக்கு நீங்கள் சாட் செய்யும் போது மெசேஜ் சென்றுவிட்டால் 2 டிக் மார்க் வரும். அதை அவர்கள் படித்துவிட்டால் அந்த டிக் நீல நிறமாக மாறிவிடும். Read Receipt முறையை நீங்கள் ஆப் செய்துவிட்டால், மெசேஜ்-யை நீங்கள் படித்தாலும் அனுப்பியவர்களுக்கு நீல நிற டிக் மார்க் காட்டாது. உங்களுக்கும் அவர்கள் படித்து விட்டார்களா என்பதை தெரிந்து கொள்ளும் நீல நிற டிக் மார்க் வராமல் இருக்கும். உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் இந்த முறையை மாற்றினால் மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.
மற்ற செய்திகள்