COBRA M Logo Top

குறையை கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு ரூ. 25 லட்சம் பரிசு.. கூகுள் வெளியிட்ட வெயிட்டான அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கூகுள் நிறுவனம் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு 25 லட்ச ரூபாய் வரையில் பரிசு அளிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

குறையை கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு ரூ. 25 லட்சம் பரிசு.. கூகுள் வெளியிட்ட வெயிட்டான அறிவிப்பு..!

Also Read | அடுத்தடுத்து நடந்த 3 பயங்கரம்... குறிப்பா அவங்க மட்டும் தான் டார்கெட்.. மொத்த மாநிலத்தையும் நடுங்க வைக்கும் 'Stone Man'.. முழுவிபரம்..!

டெக்னாலஜி துறையில் ஜாம்பவானாக திகழ்கிறது கூகுள் நிறுவனம். உலகின் மிகப்பெரிய ஓபன் சோர்ஸ் பிராஜெக்ட்களில் இயங்கிவரும் கூகுள் நிறுவனம் சமீபத்தில் தொடர்ந்து தாக்குதலை சந்தித்து வருவதாக தெரிவித்திருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ஓபன் சோர்ஸ் பிராஜெக்ட்கள் மீதான தாக்குதல்கள் 650 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்த நிலையில், இதை சரிசெய்யும் திட்டங்களையும் பரிசீலித்து வந்தது. இந்நிலையில் தான் இந்த பரிசுத்தொகை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

திட்டம்

ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் வல்னரபிலிட்டி ரிவார்ட் புரோகிராம் (Open Source Software Vulnerability Rewards Programme) அல்லது சுருக்கமாக OSS VRP எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் பல படிநிலைகள் வழியாக பரிசுகளை அளிக்க இருக்கிறது. கூகுள் மென்பொருளில் உள்ள GitHub ஆக்ஷன்ஸ், அப்ளிகேஷன் கான்ஃபிகரேஷன் (application configurations), ஆக்சஸ் கண்ட்ரோல் ரூல்ஸ் (access control rules) ஆகியவற்றில் பிழைகளை கண்டுபிடிக்கும் நிபுணர்களுக்கு 100 டாலர்களில் துவங்கி அதிகபட்சமாக 31 ஆயிரத்து 337 டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் 25 லட்ச ரூபாய்) சன்மானம் வழங்கப்பட இருக்கிறது.

Google offers Rs 25 lakh reward to spot bugs in its open source projec

Business Standard

பரிசு

அந்நிறுவனத்தின் பேசல், ஆங்குலர், கோலாங், புரோட்டோகால் பஃபர்ஸ் மற்றும் ஃபுச்சியா போன்ற முக்கிய திட்டங்களில் பிழைகளை கண்டறிபவர்களுக்கு சிறந்த பரிசு வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக அசாதாரணமான அல்லது குறிப்பாக சுவாரஸ்யமான பாதிப்புகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு அதிக தொகை வழங்கப்படும் என இந்த திட்டத்தை அறிவிக்கும் போது கூகுள் தெரிவித்திருந்தது.

இதன்மூலம் கூகுள் நிறுவனம் தனது ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நிபுணர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Also Read | "இந்த காலத்து இளைஞர்கள் மனைவினாலே தொல்லைன்னு நினைக்கிறாங்க".. விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

GOOGLE, GOOGLE OFFERS, REWARD, SPOT BUGS, OPEN SOURCE PROJECTS

மற்ற செய்திகள்