‘அதை பார்த்ததுமே கண்கலங்கிட்டேன்’!.. ‘நான் கடைசியா அழுதது அப்போதான்’.. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தான் கடைசியாக அழுத தருணம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

‘அதை பார்த்ததுமே கண்கலங்கிட்டேன்’!.. ‘நான் கடைசியா அழுதது அப்போதான்’.. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உருக்கம்..!

தமிழகத்தை சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் சிஇஓவுமான சுந்தர் பிச்சை சமீபத்தில் பிபிசி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் அமேசான் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய ஜெஃப் பெஸாஸைப் பார்த்து தான் பொறாமை கொள்வதாக சுந்தர் பிச்சை கூறினார்.

Google CEO Sundar Pichai shares when he was last cried

அதற்கு காரணம், வரும் ஜூலை 20-ம் தேதி ஜெஃப் பெஸாஸ் தனது சகோதரருடன் விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். பயணிகளை பூமியில் இருந்து 62 மைல் மேல்நோக்கி விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் 11 நிமிட பயணமாக அது இருக்கும் என சொல்லப்படுகிறது. தானும் இதுபோல் விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்க விரும்புவதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

Google CEO Sundar Pichai shares when he was last cried

அப்போது கடைசியாக எப்போது அழுதீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, ‘உலகம் முழுவதும் கொரோனாவால் இறந்தவர்களை சுமந்துகொண்டு வாகனங்கள் செல்வதை பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதேபோல் இந்தியாவிலும் கடந்த மாதங்களில் அப்படியொரு நிகழ்வை பார்த்தேன். நீண்ட நாள்களுக்கு பிறகு அப்போதுதான் நான் அழுதேன்’ என உருக்கமாக பதிலளித்துள்ளார்.

Google CEO Sundar Pichai shares when he was last cried

தொடர்ந்து சீனாவைப்போல் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறதா? கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘இணைய சுதந்திரம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சீனாவில் கூகுள் தயாரிப்புகள் எதுவுமே கிடையாது’ என சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார்.

மற்ற செய்திகள்