Jai been others

'அந்த மாதிரி' கண்டென்ட் 'அப்லோட்' பண்ணுனீங்கனா... 'சும்மா சும்மா கேட்டுட்டு இருக்க மாட்டோம்...' 'உடனே ஆக்சன் தான்...' அதுவாகவே கண்டுபிடிச்சிடும்...! - கூகுள் அதிரடி...!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

உலகில் அதிகம் உபயோகப்படுத்தும் சர்ச் என்ஜின்களில் ஒன்று கூகிள். கடந்த மே மாதம் கூகிள் நிறுவனம் இந்தியாவிற்கு என புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அமல்படுத்தியது.

'அந்த மாதிரி' கண்டென்ட் 'அப்லோட்' பண்ணுனீங்கனா... 'சும்மா சும்மா கேட்டுட்டு இருக்க மாட்டோம்...' 'உடனே ஆக்சன் தான்...' அதுவாகவே கண்டுபிடிச்சிடும்...! - கூகுள் அதிரடி...!

அதன்படி தனியுரிமை, காப்புரிமை, பாலியல் உள்ளடக்கம், போலி தகவல்கள், நீதிமன்ற உத்தரவு, சட்டம், அவதூறு போன்ற கன்டென்டுகளை கூகிள் பதிவேற்றினால் அது கட்டாயமாக நீக்கப்படும் என கூகிள் அறிவித்திருந்தது.

அதன்படி சென்ற செப்டம்பர் மாதம் இந்தியாவில் மட்டும்  29,842 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தனியுரிமை, காப்புரிமை, பாலியல் உள்ளடக்கம், போலி தகவல்கள், நீதிமன்ற உத்தரவு, சட்டம், அவதூறு போன்ற பிரிவுகளுக்கு கீழ் வந்த புகாரின் அடிப்படையில் 76,967 கன்டென்டுகளை நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

அதோடு, கூகுள் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையை மீறிய 4,50,246 கன்டென்டுகளை கூகுள் தானியங்கு முறையில் அடையாளம் கண்டு நீக்கியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

அதோடு, இதற்கு முந்தைய மாதங்களான ஏப்ரலில் 59350 கன்டென்டுகளையும், மே மாதத்தில் 71132 கன்டென்டுகளையும், ஜூனில் 83613 கன்டென்டுகளையும், ஜூலை மாதம் 95,680 கன்டென்டுகளையும் மற்றும் ஆகஸ்டில் 93,550 கன்டென்டுகளையும் கூகுள் நிறுவனம் நீக்கியதாக தெரிவித்துள்ளது.

GOOGLE

மற்ற செய்திகள்