'ண்ணோவ், என்ன உட்ருணா'... 'நேத்து நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல'... 'ஒருபுறம் Customer Care'... மறுபக்கம் ட்விட்டரில் கதறவிட்ட நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

நேற்றிரவு முதல் முடங்கியிருந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்க்கு ஏர்டெல் தான் காரணம் என நினைத்த நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்க விட்டார்கள்.

'ண்ணோவ், என்ன உட்ருணா'... 'நேத்து நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல'... 'ஒருபுறம் Customer Care'... மறுபக்கம் ட்விட்டரில் கதறவிட்ட நெட்டிசன்கள்!

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களை உலகெங்கும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். நேற்றிரவு இவற்றின் சேவைகள் திடீரென முடங்கின. இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவிலிருந்து உலகம் முழுவதும் இச்சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.

Global outage shuts down FB, Instagram, WhatsApp, Netizen blame Airtel

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக விளக்கம் அளித்திருந்த பேஸ்புக் நிறுவனம், தடங்கலுக்கு வருந்துவதாகவும், இந்த தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் எனக் கூறியிருந்தது. இந்த நிலையில் 6 மணி நேரத்திற்குப் பிறகு காலை சுமார் 4 மணி அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைத்தளங்கள் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரத்தொடங்கின. ஆனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவைகள் எதனால் முடங்கியது என்பது குறித்து அந்நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

 

இந்நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முடங்கிய நிலையில், ஏர்டெல் பயனாளர்கள் பலரும் ஏர்டெல் நெட்ஒர்க்கில் தான் ஏதோ பிரச்சனை என நினைத்து அந்நிறுவனத்தைத் திட்டி தீர்த்தார்கள். இது தொடர்பாக ட்விட்டரில் பல மீம்ஸ்கள் பறந்தது. பலரும் Flight mode போட்டுப் பார்த்து, மறுபடியும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இயங்குகிறதா என்று சோதித்துப் பார்த்துள்ளார்கள்.

இதற்கிடையே பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முடங்கியதற்கு நாங்கள் என்ன செய்வோம், இதற்கும் எங்களை விட்டு வைக்கமாட்டீர்களா என்ற ரீதியில் ஏர்டெல் நிறுவனம் பலருக்கும் பதிலடி கொடுத்து வருகிறது.

மற்ற செய்திகள்