‘இத மட்டும் பண்ணுனா உங்களுக்கு பணம்’.. வரயிருக்கும் பேஸ்புக்கின் அதிரடி திட்டம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பயனாளர்களின் நலன் கருதி பேஸ்புக் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளது.

‘இத மட்டும் பண்ணுனா உங்களுக்கு பணம்’.. வரயிருக்கும் பேஸ்புக்கின் அதிரடி திட்டம்!

உலகம் முழுவதும் பேஸ்புக் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இதில் போலி கணக்குகள் மூலம் பலர் தவறான செயல்களில் ஈடுபடுவதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டின. இதனை அடுத்து இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான போலி கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில் இதுபோன்ற போலி கணக்குகள் மூலம் நடைபெறும் குற்றங்களை தடுக்க பேஸ்புக் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது. அது என்னவென்றால் பயனாளர்களின் அனுமதியுடன் தங்களது ஆன்லைன் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இதற்காக பயனாளர்களுக்கு பணம் வழக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதற்காக ஸ்டடி(study) என்னும் செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனால் இது தொடர்பான விளம்பரங்கள் விரைவில் பேஸ்புக்கில் வரவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.