‘இனி ஃபேஸ்புக்கில் இதையெல்லாம் பார்க்க முடியாது’.. ‘புதிய அப்டேட்டை கொண்டுவரப் போவதாக அதிரடி அறிவிப்பு’..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக உள்ளது ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களைக் கவரவும், பயன்பாட்டை எளிதாக்கவும் பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஃபேஸ்புக்கில் லைக், கமெண்ட், ஷேர் ஆகியவையே பிரதானமாக உள்ளது. முதலில் இதில் வெறும் லைக் செய்யும் வசதியை மட்டும் கொடுத்திருந்த ஃபேஸ்புக் பின்னர் எமோஜி வடிவில் அதற்கு 6 ஆப்ஷன்களையும் கொடுத்தது. அவை பயனாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் புதிய அப்டேட்டை ஃபேஸ்புக் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஃபேஸ்புக்கில் பதிவுகளுக்கு கிடைக்கும் லைக்குகளை அனைவரும் பார்க்க முடியும். இது பலரிடையே பொறாமையை உருவாக்குவதாலும், பதிவுகளுக்கு கிடைக்கும் லைக்குகளே அதன் தரத்தை தீர்மானிப்பதாக அமைவதாலும் இந்த புதிய அப்டேட்டை ஃபேஸ்புக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மற்றவர்களால் ஒரு பதிவுக்கு கிடைக்கும் லைக்குகளை பார்க்க முடியாதே தவிர வழக்கம்போல பதிவிடுபவர்கள் தங்களுக்கு யாரெல்லாம் லைக் செய்திருக்கிறார்கள் எனப் பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.