'இதல்லவோ பாசம்'.. பேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர்பர்க், மனைவிக்காக உருவாக்கிய அன்புப் பரிசு!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவராக சைலண்ட்டாக உருவானவர் மார்க். பேஸ்புக்கை உருவாக்கியதன் சுவாரஸ்ய பின்னணியும் அதுதான். உலகம் முழுவதும் இன்று இத்தனை பேரின் உயிருடன் கலந்து உறவாகியிருக்கும் பேஸ்புக்கை தீர்க்கதரிசனத்தோடு மார்க் உருவாக்கியபோதே அவர் இதனை உணர்ந்திருக்க வேண்டும்.

'இதல்லவோ பாசம்'.. பேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர்பர்க், மனைவிக்காக உருவாக்கிய அன்புப் பரிசு!

ஆனால் அப்போதும் எவ்விதமான சலனமும் இன்றி பேஸ்புக்கை அதே சைலண்ட் தன்மையுடன் மார்க் சந்தையில் இறக்கினார். இன்று அதன் அளவலாவிய ரீச், உலகின் அடுத்தடுத்த நகர்வைத் தீர்மானிக்கும் முக்கியமான இடத்தில் பேஸ்புக்கை கொண்டு சென்று நிறுத்தியுள்ளது. ஆனால் அத்தகைய மார்க் தனக்கான நலன்களிலும் சந்தோஷங்களிலும் கூட கவனம் செலுத்தக் கூடியவர்தான். 

இன்றுவரை அவரது கண்களுக்கு உவப்பான நீல நிறத்தை பேஸ்புக்கின் தீம் கலராக வைத்திருக்கிறார். தான் விரும்பும் டார்க் கிரே மற்றும் புளூ நிற டி ஷர்ட்டுகளையே தொடர்ந்து அணிவார். தனது மனைவிக்கும் குழந்தைகளுக்குமான அன்பை பரிமாறத் தவறக்கூடாது என நினைப்பார். அதற்காக தனது மனைவி, மக்களுக்காக ஸ்லீப் பாக்ஸ் என்ற ஒன்றை தயார் செய்திருக்கிறார்.

இதுபற்றி பேசிய மார்க், தன் மனைவி பிரிசில்லா குழந்தைகள் பெற்ற நாள் முதலாய் தூங்காத இரவுகளைக் கொண்டுள்ளதாகவும், குழந்தைகள் விழித்துவிட்டார்களா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டிருப்பார். இதனால் அவர் சரியாய் தூங்க வேண்டுமென்று நினைத்து ஸ்லீப் பாக்ஸ் என்றொரு சாதனத்தை உருவாக்க நினைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஸ்லீப் பாக்ஸ், காலை 6-7 மணிக்கெல்லாம் சிறியதொரு ஒளியுடன் தூக்கத்தைக் கெடுக்காத அளவு மிளிரும். ஆனால் நேரம் காட்டாது. இதனால் பிரிசில்லா நிம்மதியாக தூங்கவியலும் என்று கூறிய மார்க், தொழில் முனைவோர்கள் இதுபோன்றதொரு சாதனத்தை உற்பத்தி செய்து தரலாம் என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார்.

FACEBOOK, ZUCKERBERG, SLEEPBOX