Anantham Mobile

‘சொன்ன மாதிரியே செஞ்சிட்டாரு’.. Twitter நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்.. விலை எவ்ளோன்னு கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சொன்ன மாதிரியே செஞ்சிட்டாரு’.. Twitter நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்.. விலை எவ்ளோன்னு கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு முயன்று வந்தார். இதன்படி டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு அவர் முன் வந்தார். மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் தெரிவித்தார். முன்னதாக, டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வைத்திருந்ததால் அவரை நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், எலான் மஸ்க்கின் ஆஃபரை டுவிட்டர் நிர்வாகம் ஏற்றதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்க டாலர் என்ற கணக்கில் வழங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வாரத்துக்குள் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

Elon Musk to acquire Twitter for 44 billion dollar

இந்த நிலையில் 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்) எலான் மஸ்க்கிடம் விற்பனை செய்ய டுவிட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டுவிட்டர் நிர்வாகக்குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், அதன்பின்னர் டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. தற்போது டுவிட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் வழிநடத்தி வருகிறார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

TWITTER, ELONMUSK

மற்ற செய்திகள்