எலான் மஸ்க் போட்டுள்ள 'மெகா' திட்டம்...! 'இது மட்டும் நடந்துச்சுன்னா வேற லெவல்...' - மனுஷன் சொன்னா செஞ்சிடுவாரு...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்எலான் மாஸ்க் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் போட்ட பதிவு ஒன்று உலக விஞ்ஞானிகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவான எலான் மஸ்க் தனக்கு தோணும் புதுப்புது எண்ணங்களை எல்லாம் தன் டிவீட்டர் பதிவாக போடுவார். இதை ஒரு பேச்சுக்கு என சொல்லாமல் அதை செய்து காட்டும் திறமை கொண்டவர் எலான் மஸ்க்.
சில வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்தும் திட்டத்துடன்தான் டெஸ்லா நிறுவனத்தை ஆரம்பித்தார் எலான் மஸ்க். இன்று அது உலகின் மிகப் பெரிய தனியார் விண்வெளி நிறுவனமாக மாறி நிற்கிறது.
அதேபோல் இப்போதும் எலான் மஸ்க் போட்ட டிவீட் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த டீவீட்டில் 'வளி மண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை தனியாக எடுத்து அதை ராக்கெட்களுக்கான எரிபொருளாக மாற்றும் திட்டத்தை ஸ்பேக்-எக்ஸ் மேற்கொள்ளவுள்ளது. யாருக்காவது விருப்பம் இருந்தால் சேரலாம். இது செவ்வாய் கிரகத்துக்கு ரொம்ப முக்கியமானது' என பதிவிட்டுள்ளார்.
இதனை சாதரணமாக பார்த்தால் ராக்கெட்டுக்கான எரிபொருள் தயாரிப்பு என்றுதான் தோன்றும். ஆனால், வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை உபயோகித்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆராய்ந்தால் வாயை பிளக்கும் வகையில் இருக்கிறது.
நம்முடைய கிட்டத்தட்ட 77 சதவீத அளவுக்கு நைட்ரஜன் வாயுவும், அடுத்து ஆக்சிஜன் கிட்டத்தட்ட 20 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. மிச்ச சொச்ச வாயுக்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. அதில்தான் கார்பன் டை ஆக்சைடும் அடக்கம். ஆனால் எஞ்சியிருக்கும் சொச்ச வாயுக்களில் அதிகம் இருப்பது கார்பன் டை ஆக்சைடுதான்.
இந்த கார்பன் டை ஆக்சைடின் அதிகரிப்பு தான் புவியில் ஏற்படும் மாசு மற்றும் காலநிலை மாற்றங்களுக்கும் வெப்பமயமாதலுக்கும் காரணமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். எலான் மஸ்க்கின் திட்டப்படி பார்த்தால் கார்பன் டை ஆக்ஸைடை ராக்கெட்டுகளுக்கான எரிவாயுவாக மாற்றும் திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செயல்படுத்தினால் பெரும் மாற்றமே நிகழும்.
SpaceX is starting a program to take CO2 out of atmosphere & turn it into rocket fuel. Please join if interested.
— Elon Musk (@elonmusk) December 13, 2021
எலான் மஸ்க்கின் திட்டம் வெற்றி பெற்றால் வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்