டுவிட்டர் ஓனராக எலான் மஸ்க் பதிவிட்ட ‘முதல்’ ட்வீட்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய பின் எலான் மஸ்க் பதிவிட்ட முதல் டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்க முன் வந்தார். இதனை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு அந்த நிறுவனம் சம்மதித்துள்ளது.
இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்ர் எலான் மஸ்க் தனது முதல் டுவீட்டை பதிவிட்டுள்ளார். அதில், ‘எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் அதுதான் பேச்சு சுதந்திரம்’ என எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் பதிவிட்ட மற்றொரு டுவீட்டில், ‘சுதந்திரமான பேச்சு என்பது செயல்பாட்டில் இருக்கும் ஜனநாயகத்தின் அடித்தளம். மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான முக்கியமான விஷயங்கள் டுவிட்டரில் விவாதிக்கப்படுகின்றன. புதிய அம்சங்களுடன் டுவிட்டரை மேம்படுத்தி, முன்பு எப்போதும் இல்லாததை விட சிறந்ததாக மாற்ற விரும்புகிறேன்.
டுவிட்டரில் வைரஸ் தாக்குதல்களை நிறுத்து, எல்லா மனிதர்களையும் அங்கீகரிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் டுவிட்டரை சிறந்ததாக உருவாக்க விரும்புகிறேன். டுவிட்டரில் மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. அதை வெளிக்கொண்டு வர, இந்த நிறுவனத்துடனும் அதன் பயனர்களுடனும் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
🚀💫♥️ Yesss!!! ♥️💫🚀 pic.twitter.com/0T9HzUHuh6
— Elon Musk (@elonmusk) April 25, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்