இந்த ‘வெப்சைட்டுகளை’ மட்டும் ‘ஓபன்’ பண்ணிடாதீங்க... ‘கொரோனா’ அச்சத்தை பயன்படுத்தி... ‘அதிர்ச்சி’ கொடுக்கும் இணையதளங்கள்...
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கொரோனா அச்சுறுத்தலை பயன்படுத்தி பயனாளர்களின் தகவல்களை திருடும் இணையதளங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இதுவரை 110 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொடர்பான வதந்திகளும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கொரோனா தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இதைப் பயன்படுத்தி பல இணையதளங்கள் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று கொரோனா பெயரில் பயனாளர்களின் தகவல்களைத் திருடும் இணையதளங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கீழ்க்கண்ட இணையதளங்களை பயனாளர்கள் பார்க்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆபத்தான இணையதளங்களின் பட்டியல்
1. coronavirusstatus.space
2. coronavirus-map.com
3. blogcoronacl.canalcero.digital
4. coronavirus.zone
5. coronavirus-realtime.com
6. coronavirus.app
7. bgvfr.coronavirusaware.xyz
8. coronavirusaware.xyz
9. coronavirus.healthcare
10. survivecoronavirus.org
11. vaccine-coronavirus.com
12. coronavirus.cc
13. bestcoronavirusprotect.tk
14. coronavirusupdate.tk
கொரோனா பாதிப்பு குறித்து தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் கொரோனா தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள +91-11-23978046 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அத்துடன் கொரோனா பாதிப்புகள் மற்றும் நிலவரங்களை அறிய, மத்திய உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணையதளத்தையும் அணுகலாம். இந்தியாவில் மின்னஞ்சல் மூலம் கொரோனா தொடர்பான விபரங்களைப் பெற ncov2019@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேலும், கொரோனா தொடர்பாக பரவும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே பிறருக்கு அதை ஃபார்வேர்ட் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.