இத மட்டும் 'வால்பேப்பரா' வச்சுராதீங்க சாமி! ஸ்மார்ட் போன்களை 'காவு' வாங்கும் அழகிய புகைப்படம்... கதறும் பயனாளர்கள்... 'காரணம்' என்ன?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

தற்போதைய லாக்டவுன் காலத்தில் அனைவருக்கும் ஒரு உற்ற நண்பனாக, உடன்பிறவா சகோதரனாக திகழ்வது ஸ்மார்ட் போன்கள் தான். முன்பு மாதிரி நினைத்த நேரம் கடைகளுக்கு செல்ல முடியாது என்பதால் குழந்தை போல அதை பொத்திப்பொத்தி பாதுகாக்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த நேரத்தில் ஒரு அழகிய வால்பேப்பரை ஸ்மார்ட் போனில் வைத்தால் அது போனை கிராஷ் செய்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இத மட்டும் 'வால்பேப்பரா' வச்சுராதீங்க சாமி! ஸ்மார்ட் போன்களை 'காவு' வாங்கும் அழகிய புகைப்படம்... கதறும் பயனாளர்கள்... 'காரணம்' என்ன?

தொழில்நுட்ப தகவல்களை வழங்கும் ஐஸ் யுனிவர்ஸ் என்னும் பக்கம் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்த ட்வீட் வைரலான அதே வேளையில், சோதித்து பார்க்கிறேன் பேர்வழி என ஏராளமானோர் தங்கள் மொபைலில் இந்த வால்பேப்பரை வைத்து போன் கிராஷ் ஆகிவிட்டதாக வருத்தத்துடன் பதிவு செய்துள்ளனர்.

முதலில் சாம்சங் போன்களில் தான் இந்த பிரச்சினை அதிகம் என்று கூறப்பட்டது. ஆனால் சாம்சங் போன்கள் மட்டுமின்றி கூகுள், சியாமி, ஒன் பிளஸ், நோக்கியா என பிற ஆண்ட்ராய்டு போன்களும் இதே பிரச்சினையை சந்திப்பதாக கூறப்படுகிறது. இப்படி போன் செயலிழந்து போவதற்கு முக்கியக் காரணம் அந்தப் புகைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் color profile தானாம். இந்தப் புகைப்படம் கூகுளின் Skia RGB ப்ரோஃபைலைப் பயன்படுத்துகிறது.

இதுபற்றி 9to5Google என்ற பிரபல இணையதளத்தைச் சேர்ந்த டைய்லான் ரவுசல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "இந்த வால்பேப்பரானது ஆண்ட்ராய்டு 11-யைப் பயன்படுத்தும் போன்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இவற்றில் தானாகவே இந்தப் புகைப்படத்தின் color profile sRGB (Standard Red Green Blue) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிடுகின்றன. ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்குக் கீழான ஆண்ட்ராய்டு வெர்ஷன்களைப் பயன்படுத்தும் போன்கள் இதைச் செய்வது இல்லை. இதனால்தான் அவை அந்தப் புகைப்படத்தை லோட் செய்ய முடியாமல் கிராஷ் ஆகி போன்கள் செயலிழந்து போகின்றன" என தெரிவித்து இருக்கிறார்.

ஒருவேளை உங்கள் மொபைலிலும் இந்த வால்பேப்பரை நீங்கள் வைத்துப்பார்க்க ஆசைப்பட்டால் அந்தப் புகைப்படத்தை sRGB கலர் ப்ரோஃபைலுக்கு மாற்றி விட்டுப் பயன்படுத்தலாம். இல்லையெனில் உங்கள் மொபைல் கிராஷ் ஆகிவிடும். பின்னர் மொபைலை ரீசெட் செய்து தான் நீங்கள் பயன்படுத்த முடியும். ஒரு வால்பேப்பரால் அப்படி என்ன வந்துவிட போகிறது? என நினைத்து ஏராளமானோர் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்