'தப்பி தவறி கூட இத செஞ்சிராதீங்க '... 'கொரோனாவின் அடுத்த அட்டாக்'... பதறும் 'ஐடி' வல்லுநர்கள்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கொரோனா வைரஸ் குறித்து நாளுக்குநாள் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,  சீனாவில் மட்டும் வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

'தப்பி தவறி கூட இத செஞ்சிராதீங்க '... 'கொரோனாவின் அடுத்த அட்டாக்'... பதறும் 'ஐடி' வல்லுநர்கள்!

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. இது உலகம் முழுவதும் கடும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொபைல்போன் மற்றும் கணினிகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என 'காஸ்பெர்ஸ்கை' Antivirus' நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையத்தில் தற்போது கொரோனா வைரஸ் என்ற பெயரில் PDF,  Documents Format-ல் உள்ள ஃபைல்கள் உலா வந்து கொண்டு இருக்கின்றன. அவை கொரோனா வைரஸிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை குறிக்கும் வகையில் அந்த ஃபைல்கள் இருக்கும். ஆனால் இத்தகைய ஃபைல்கள் போலியானவை என்று காஸ்பெர்ஸ்கை Antivirus (Kaspersky Antivirus) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தகைய ஃபைல்களை நாம் ஓபன்  செய்யும் போது, கணினி, மொபைல் போன்களில் மால்வேர்கள் ஊடுருவுகிறது. எனவே உங்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான ஃபைல்கள் வந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

CORONAVIRUS, KASPERSKY, MALWARE, PHONE, ANTIVIRUS