'உள்ள வெச்சேதான் விக்கறாங்க'... 'சீன ஸ்மார்ட் போன்களால்'... 'இப்படி எல்லாம் கூட ஆபத்து இருக்கா?... 'பீதியை கிளப்பியுள்ள பகீர் தகவல்!''...
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்செக்யூர்-டி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் சீன ஸ்மார்ட் போன்கள் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.
மலிவான விலையில், சிறந்த வசதிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் சீன ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பெரிய வரவேற்பு உள்ளது. ஆனாலும் அந்நாட்டின் ஹூவாய் போன்கள் மற்றும் சில சீன செயலிகள் பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் பணத்தை திருடும் வகையில் மால்வேர்கள் நிறுவப்பட்ட சீன ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரான்ஷன் ஹோல்டிங்ஸ் என்ற சீன நிறுவனத்தின் போன் பிராண்டான டெக்னோW2 என்ற போனில் xHepler, Triada என்ற 2 வகையான மால்வேர்கள் நிறுவப்பட்டு இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து ஆய்வு நடத்திய செக்யூர்-டி என்ற மோசடிகளை கண்டறியும் நிறுவனமும் டெக்னோ போன்களில் பேங்கிங் தகவல்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை திருடும் மால்வேர்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதை ஒப்புக்கொண்ட டிரான்ஷன் நிறுவனம், "இது உதிரி பாகங்கள் சப்ளை செய்தவர்களின் வேலையாக இருக்கலாம். போன்களில் மால்வேர்களை நிறுவுவதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்