கூகுள் க்ரோம் பயன்பாட்டாளர்களே… உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை..!- அரசு சொல்றத கேளுங்க..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கூகுள் க்ரோம் ப்ரவுசரைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் க்ரோம் ப்ரவுசரில் பல பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் நிறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கணினிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது. இந்தத் தாக்குதலை மேற்கொள்ளும் நபர் எளிதாக ஒரு நபரின் சுய விவரங்களைத் திருடிவிட முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட பெர்சனல் கணினிகளை தாக்கி அதில் மால்வேர்களைப் புகுத்த முடியும். எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வகையில் க்ரோம் பரவுசரைப் பாதுகாக்க சில மென்பொருள் அப்டேட்களை கூகுள் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதனால் கூகுள் க்ரோம் ப்ரவுசரைப் பயன்படுத்துபவர்கள் விரைவில் இந்தப் புதிய சாஃப்ட்வேர் அப்டேட்டை செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசும் அறிவுறுத்துகிறது.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் தளங்களுக்காக க்ரோம் சேனல் 96.0.4664.93 வரையில் கூகுள் அப்டேட் செய்துள்ளது. பயனாளர்களுக்கு இந்த அப்டேட் பயன்பாட்டுக்கு உள்ளது. தொடர் அப்டேட்களையும் கூகுள் தொடர்ந்து மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சுமார் 22 பாதுகாப்புப் பிரச்னைகளை க்ரோம் ப்ரவுசரில் சரி செய்துள்ளதாம் கூகுள்.
புதிய கூகுள் க்ரோம் ப்ரவுசர் அப்டேட் மூலம் கூகுள் சாராத பல ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பிரச்னைக்குரிய பாதுகாப்பு அம்சங்களை கூகுள் சரி செய்து உள்ளதாகக் கூறுகிறது. இதுகுறித்து மத்திய ஐடி துறையில் CERT அமைப்பு, “V8 டைப்போ குளறுபடிகளின் காரணமாக கூகுள் க்ரோம் பரவுசரில் பல பாதுகாப்புப் பிரச்னைகள் இருந்தன. தொலைதூரத் தாக்குதல்காரர் ஒருவர் எளிதாக இந்தப் பிரச்னைகளைப் பயன்படுத்தி தனியாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு வெப் பேஜ்-க்குள் இழுத்து பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.
இதனால் எந்தவொரு தனிப்பட்ட கணினிகளையும் எளிதாகத் தாக்க முடிகிற சூழல் அமைந்தால் தகவல்கள் சுய விவரங்கள் கசிய வாய்ப்பு உள்ளது” என எச்சரிக்கை கொடுத்துள்ளது.
மற்ற செய்திகள்