'பாதுகாப்பு குறைபாடு'... 'கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து'... 'பிரபல செயலி நீக்கம்'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கூகுளின் ப்ளே ஸ்டோர் ஆண்டிராய்டுகளுக்கான செயலிகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சில செயலிகளை அவ்வப்போது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியும் வருகிறது கூகுள்.

'பாதுகாப்பு குறைபாடு'... 'கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து'... 'பிரபல செயலி நீக்கம்'!

100 மில்லியனுக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்ட பிரபல செயலி கேம் ஸ்கேனர். இந்தச் செயலியை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎஃப் ஆக எளிதாக மாற்றலாம். பலருக்கும் பெரிய அளவில் பயன்பட்ட இந்தச் செயலி மீது மால்வேர் (வைரஸ்) தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து கேம்ஸ்கேனர் செயலியை நீக்கியுள்ளது கூகுள்.

மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதால், ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம் ஸ்கேனர்  செயலியில் வணிக வருவாய்க்காக  ஏராளமான விளம்பரங்கள் இடம்பெறும் என்றும், இதில் உள்ள போலி விளம்பரங்கள் மூலம் மால்வேர் உருவாகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களின் வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள் ஹேக்கர்களால் திருடப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

ஓசிஆர் எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் மூலம் ஸ்மார்ட் போன் வழியாக ஊடுருவி தகவல்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த கூகுள் நிறுவனம், இந்த செயலியை உடனே நீக்கும்படி பயனாளர்களையும்  அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் கூகுள், பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட செயலிகளை அதிரடிகளை நீக்கி வருகிறது. சமீபத்தில் சூப்பர் செல்ஃபி, சிஓஎஸ் கேமரா, பாப் கேமரா மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில் உள்ளிட்ட 80-க்கும் அதிகமான செயலிகளை கூகுள் நீக்கியது.

GOOGLE, ANDROID, CAMSCANNER, APP