அமேசான் நிறுவன அதிபர் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு! ஏன் இப்படி செஞ்சார்? - அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்(Jeff Bezos) தமது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்திருக்கிறார்.

அமேசான் நிறுவன அதிபர் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு! ஏன் இப்படி செஞ்சார்? - அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதுதொடர்பான அறிக்கையையும் அவர் தற்போது கடிதமாக வெளியிட்டிருக்கிறார். தொழில்நுட்ப உலகில் இந்த செய்தி பரவலாக பேசப்பட்டு இருக்கிறது. தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் அவர் விலகினாலும் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிகிறது.

அமேசான் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கையை அவர் வெளியிட்ட போது, இந்த அறிவிப்பையும் சேர்த்து வெளியிட்டு இருக்கிறார். கடந்த 3 வருடங்களில் மட்டும் 100 மில்லியன் டாலர் அளவுக்கு அமேசான் நிறுவனம் வர்த்தகம் செய்திருக்கிறது. உலகின் பெரு நிறுவனங்களில் ஒன்றான அமேசான் 1994ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸால் தொடங்கப்பட்டது. இப்போதைக்கு இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 185 மில்லியன் டாலர்களாக இருக்கிறது.

ஜெஃப் பெசோஸின் அப்பா க்யூபாவில் இருந்து வந்த அகதி தான் என்றாலும் அம்மா வழியில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்ததால் சின்ன வயதிலிருந்து துருதுருவென்று இருந்த ஜெஃப் பெசோஸ் முதன் முதலில் எலக்ட்ரானிக் அலாரம் தயாரித்திருக்கிறார்.

ALSO READ: 'Corona' நெகடிவ் என்பதற்கு ஆவணம் இருந்தும் 2 நாட்கள் கணவரைப் பிரிந்து தனிமை முகாமில் அடைக்கப்பட்ட பெண்!.. ‘காரணம் இப்படி ஒரு விஷயத்தை கோட்டை விட்டது தான்!’

அதன் பின்னர் விண்வெளி வீரனாக ஆக வேண்டும் என்கிற ஆசை தாத்தாவின் ஆர்வத்தைப் பார்த்து அவருக்கும் வந்து இருந்தது. ஆனால் கல்லூரியில் அவருடைய கவனம் கணினி பக்கம் திரும்பியது. கணினி மற்றும் மின்னணு அறிவியல் துறையில் பட்டம் படித்து வெளியேறிய இவர் பெரு நிறுவனங்களில் வேலை பார்த்து தொடக்கத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து இளம் வயதிலேயே நிதி நிறுவனம் ஒன்றின் துணை தலைவராக பதவியேற்றார்.

ஆனால் அந்த சமயத்தில் இணையத்தில் வர்த்தகம் செய்பவர்கள் சேவை வரி செலுத்த தேவையில்லை என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் சொன்னதும் அந்த வேலையை தூக்கி வீசிவிட்டு வெளியேறினார் ஜெஃப் பெசோஸ். பின்னர் இணையத்தில் புத்தகங்கள் ஆர்டர் செய்தால் போதும் வீட்டுக்கே டெலிவரி வந்துவிடும் என்கிற கான்செப்டை செயல்படுத்த தொடங்கினார்.  மிகக்குறைவான ஆட்களை கொண்டு தொடங்கிய இந்த செயலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அப்போது சில வாடிக்கையாளர்கள் ஏன் இப்படி எலக்ட்ரானிக் சாதனங்களை விற்கக்கூடாது? என்று கேட்க உடனே அவற்றையும்ஜெஃப் பெசோஸ் சேர்த்து கொண்டார். புத்தகங்களை விட எலக்ட்ரானிக் சாதனங்கள் சக்கை போடு போட்டன. இப்போது அமேசானின் விற்கப்படாத சாதனங்களே இல்லை என்கிற அளவுக்கு ஆகிவிட்டது.

இப்படிப்பட்ட வளர்ச்சிப்பாதையில் நிறுவனத்தை செலுத்திக் கொண்டிருந்த அவர் இந்த முடிவை ஏன் எடுத்தார் என்பது தொடர்பாக அவர் தெரிவித்திருக்கிறார். அதில் புதிய தயாரிப்புகளிலும் சில ஆரம்ப முயற்சிகளிலும் கவனம் செலுத்தப் போவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

27 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பயணம் தொடங்கியதாகவும் அப்போது அமேசான் ஒரு யோசனையாக மட்டுமே இருந்ததாகவும் இணையம் என்றால் என்ன? என்கிற கேள்வியை பலரும் தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்ட ஜெஃப் பெசோஸ்,  இப்போது திறமையான அர்ப்பணிப்பு உடைய 13 லட்சம் பேர் அமேசானில் பணியாற்றுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வெற்றிகரமான செயல்கள் எல்லாம்  எப்படி சாத்தியமானது? கண்டுபிடிப்பால் மட்டும்தான் இது நடந்திருக்கிறது. வெற்றிக்கான வேர் கண்டுபிடிப்பு தான் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ: பிரியாணி 20 ரூபாய் .. அதுவும் இல்லையா?.. 'பசிக்குதா? எடுத்துக்குங்க!'.. ‘அந்த மனசுதான் சார் கடவுள்!’ - ‘நெகிழ வைக்கும்’ இளம்பெண்ணின் ‘வைரல்’ செயல்!

இதனிடையே அமேசான் வெப் சர்வீஸின் தலைவராக உள்ள 52 வயதான அண்டி ஜாஸ்ஸிதான் அமேசானின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்