10 நகரங்களில் 'அதிரடியாக'... சேவையை நிறுத்திய 'பிரபல' நிறுவனம்... வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் உள்ள 10 முக்கிய நகரங்களில் அதன் 3 ஜி சேவையை அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதன்முதலில் கடந்த 2019-ம் ஆண்டு கொல்கத்தாவில் 3 ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் நிறுத்தியது. தொடர்ந்து இனி அந்நகரத்தில் 4ஜி சேவைகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது கொல்கத்தாவையும் சேர்த்து மகாராஷ்டிரா, கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய நகரங்களில் 3 ஜி சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
தற்போது ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலை அப்டேட் செய்ய வேண்டும் அல்லது தங்களது சிம் கார்டை 4ஜி ஆக மேம்படுத்த வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முறையாக தெரிவித்து விட்டதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அதே நேரத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவைகள் நாடு முழுவதும் வருகின்ற மார்ச் மாதம் 2020-க்குள் நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.4ஜி சேவையை நாடு முழுவதும் பலப்படுத்தும் நோக்கத்தில் ஏர்டெல் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.