ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல், வோடஃபோன்..! வெளியான அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஜியோ தவிர்த்து மற்ற வாய்ஸ்கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் என ஜியோ நிறுவனம் அறிவித்த நிலையில், வாய்ஸ்கால்கள் முற்றிலும் இலவசம் என ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சில தினங்களுக்கு முன்பு ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் இதர நெட்வொர்க்குகளுக்கான அவுட்கோயிங் அழைப்புக்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்தது. மேலும் இது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இடையேயான அழைப்புகள் இலவசமாகவே வழங்கப்படும் என தெரிவித்தது.
அதே சமயம் அவுட்கோயிங் அழைப்புகளுக்கு வசூலிக்கப்படும் 6 பைசாவுக்கு இணையாக இண்டர்நெட் டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தது. இந்நிலையில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் வாய்ஸ்கால்கள் முழுவதும் இலவசம் என அறிவித்துள்ளது. இதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
Hi! We would be thrilled to have you on board. Airtel unlimited packs are truly unlimited, we will not charge you for any outgoing calls. Just DM us your number, so that I can ensure a seamless transition. You can (cont) https://t.co/ksAsVJMjUi https://t.co/2G23qpsqlP
— Bharti Airtel India (@Airtel_Presence) October 10, 2019
Hi! Vodafone has been bearing these charges all along and continues to do so. So if you are on a Vodafone Unlimited plan – all your calls continue to be truly free. #ProConsumer – Aliya
— Vodafone (@VodafoneIN) October 10, 2019