Mobile வாடிக்கையாளர்களே...! செல்போன் டவர் உயரத்திற்கு ஏறிய 'ரீசார்ஜ்' கட்டணம் .. முழு விவரம்!!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இந்தியாவின் பாரதி ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 26-ஆம் தேதி முதல் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பயனாளரிடம் இருந்தும் கிடைக்கும் வருவாயை ஈட்டும் நோக்கத்துடன் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு ரீசார்ஜ் பிளானுக்கும் சராசரியாக 20% முதல் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது. ரீசார்ஜ் கட்டணத்தில் ஏர்டெல் அறிவித்துள்ள விலை உயர்வு காரணமாக வரும் நாட்களில் இந்தியாவின் மற்ற டெலிகாம் நிறுவனங்களும் விலையை ஏற்றம் செய்யும் வாய்ப்புள்ளதாக நிதித்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சுமார் 321 மில்லியன் மக்கள் ஏர்டெல் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்